பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விவர்த்தகம்

வினை


விவர்த்தகம் - ஒரு பொருள் தன் வடிவத்தை விடாமல் வேறு வடிவத்தைக் காட்டல்.

விவர்த்தனம் - பெருக்கம். எ-டு பரிமாணம், விவர்த்தனம், மாயம் (சிசிபப 209)

விவர்த்தனனவாதம் - பரிணாம வாதம்.

விவேகம் - நிறைதன்மை.

விவேகித்து அறிதல் - மெய்யாக உணர்தல்.

விவேகமுத்தி - எண் முத்திகளில் ஒரு வகை பிரகிருதியினின்றும் உயிர் தன்னை வேறாகப் பகுத்தறிவதேமுத்தி. இது சாங்ககியர் கொள்கை. உலகம் பிரமத்தின் தோற்றம். இத்தோற்றத்திற்குக் காரணமாகிய மாயையின் வேறாகிய பிரமமே யான் என உணர்வதே முத்தி. இது அத்வைதிகள் கொள்கை.

விழவு - விளையாட்டு.

விழுச் சுடர் - மிக்க ஒளி.

விழும் - பிறக்கும்.

விளக்கு - காட்டு.

விளம்பு - கூறு.

விள்ளற்பாலது - விடற்பாலது.

விளித்தல் - அழைத்தல், மெய் கண்ட நூல்களில் இது ஐந்து வகையில் அமைந்துள்ளது. 1) இறைவனை நோக்கி விளித்தல் தேவே, ஐயனே,அரனே, சிவ பெருமானே. 2) குருவை விளித்தல் மெய்கண்ட தேவே. மருதச் சம்பந்தா. 3) மாணாக்கரை விளித்தல் - அப்பா, புதல்வா, உத்தமனே. 4) ஒருமை பன்மையில் விளித்தல் -நவிற்றுவேன். நவிற்றினரே, நீ நாம். 5) உடன்பாடு, எதிர்மறை விளிப்பு -என்பர் ஒரார்.

விளைதல் - மேம்படுதல்.

விளையாடி - நுகர்ந்து.

விளையாட்டு - இறைவன் திருவிளையாடல். இறைவனுக்கு எச்செயலும் ஒரு விளையாட்டே எளிதிற்செய்யப்படக் கூடியதால்விளையாட்டு எனப்பட்டது. இது உயிர்கள் உய்வதற்கே உரியது.

"ஐயா ஆட் கொண்டிருக்கும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகை யெல்லாம் உயந்தொழிந்தோம்”

மாணிக்க வாசகர்.

விளையாது - உளதாதலின்றி.

விளைவிக்கப்படுதல் - உண்டாக்கப்படுதல்.

விறல் - பெருமை, சீர்த்தி, சொல் எ-டு அண்ணல் விறல் எண்ணாது (சிபி 4).

விறல்மீண்டநாயனார் - வேளாளர். செங்குன்றுர் - மலைநாடு சிவனடியார்களை வணங்காது சென்ற சுந்தரமூர்த்தி நாயரை, 'இவ்வன்றொண்டன் அடியார் களுக்குப் புறம்பு” என்றவர். சங்கம வழிபாடு (63).

விறற்கட்டு - வென்றதாகக் கூறும் உரை.

வினை - பொருள் செயல் அல்லது தொழில் வகை; 1) இருவினை: நல்வினை, தீவினை 2) மூவினை: மானதம், வாசிகம்,காயிகம் 3) நால்வினை: மூலகன்மம், ஆகாமிய கன்மம் சஞ்சித கன்மம், பிராரத்த கன்மம்

4) ஐவினை: நல்வினை, ஆத்தியான்மிகவினை, ஆதி மார்க்க வினை, மாந்திர வினை, வைதிக வினை.

242