பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெதிரேகச் சொல்

வேதமும் கடவுளரும்


வெதிரேகச் சொல் - நெருப்பு இல்லாத இடத்தில் புகை இல்லை என்று எதிர்மறையாக நீரோடையை உவமை கூறுவது. இதற்கு 5 உறுப்புகள் உண்டு. மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு ‘உபநயம், நிகமனம்' மற்றொரு சொல் அன்னுவயம். இதற்கு 5 உறுப்புகள் உண்டு.

வெப்பு - காய்ச்சல், சம்பந்தர் பாண்டியன் காய்ச்சலைப் பாடிப் போக்குதல் (திப70) பா. திருஞான சம்பந்தர் செய்த அற்புதங்கள்.

வெம்குரு - எமன்.

வெம் சினம் - கடுங்கோபம்.

வெம்பந்தம் - கொடிய தளை.

வெம்பிறவி - கொடிய பிறப்பு.

வெம்மை - வெப்பு.

வெய்துற்று - துன்புற்று, சின முற்று. எ-டு வெய்துற்று உரைக்க.

வெய்ய - கொடிய.

வெய்யோன் - பகலவன்.

வெரிந் - முதுகு.

வெள்ளறிவு - பொய்யுணர்வு.

வெள்ளி - 1) உலோகம் 2) 9 கோணில் ஒன்று.


வெள்ளுயிர் - சுத்தான்மா.

வெளி - விண், ஒளி.

வெளியன் - சிவன்.

வெற்பின் மிசை - கயிலை மலையின் மேல்.

வெற்றெனத் தொடுத்தல் - ஓர் உத்தி. பொருள் வெளிப்படையாகத் தோன்றச் சொற்களைத் தொடுத்தல்.

வெறு வெளி - அபரநாதம்.

வெறும் பாழ் - பரநாதம்.


வே

வேகம் - கதி.

வேகி - உருவத் திருமேனிகளில் ஒன்று. இறைவன் காமாரி உருவத்தில் இருந்து வினை ஒழித்தல்.

வேடம் - திருவேடம். விபூதி, உருத்திராக்கம் எ-டு மலிந்தவர் வேடமும் (சிபோ நூபா 12)

வேட்கை - அவா.

வேட்டுவன் - குளவி,புழு.

வேணாட்டடிகள் - 9ஆம் திரு முறை ஆசிரியர்கள் 9 பேரில் ஒருவர்.

வேண்டாமை - மறுபிறவி வேண்டாத நிலை எ-டு வேண்டாமை வேண்டவரும்.

வேதம் (சுருதி) - மறை ஒருவரால் செய்யப்பட்டதன்று. தானே உண்டானது. அவ்வாறெனின், அது பிரமாணம் எனப்படும். இதன் முற்பகுதி தரும காண்டம் பிற்பகுதி ஞான காண்டம். உலகம்தோன்றி அழியும் முறை ஞான காண்டத்திலே கூறப்படுகிறது. இது ஆறு உறுப்புகளும் மூன்று உபவேதங்களும் கொண்டது. இருக்கு, யசுர், சாமம்,அதர்வணம் என 4 பழமையானது இருக்கு.

வேதக் கோவந்து - வேதவினை முதலான சிவன், திருமால் நெற்றியிலே தோன்றி, அவருக்குப் படைப்பை உண்டாக்கிக் கொடுத்தான்.

வேதமும் கடவுளரும் - வேதத்தில் பல கடவுளர் கூறப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் தனித்தனிச் சுதந்திரக் கடவுளர் என்பது வேதத்தின் கருத்தன்று. ஏனென்றால், கடவுள்

244