பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேத மதம்

வேறாதல்


ஒருவனே என்னும் கருத்துப் பல இடங்களில் அதில் வருகின்றது. அவ்வாறு குறிப்பிடப்படும் ஒருவன் பதி அல்லது சிவனே.

வேத மதம் - இந்திய நூல்களில் மிகப் பழமையானது வேதமே ஆயினும், சைவசமயம் வேத காலத்திற்கு முற்பட்டது. வேத காலத்தில் சைவமே வேதமாயிற்று. வேத மதம் அல்லது வேத நெறி என்பதை வைதிகம் எனவும் வழங்குவர். வேதத்தை ஏற்றுக் கொள்ளாத மதங்கள் அவைதிகம் எனப்படும்.

வேதவியாசன் - பாற்கரியர், மாயாவாதி, சத்திப்பிரமவாதி, கிரீடாப்பிரமவாதி ஆகிய வேதாந்தவாதிகளுக்கு நூல் செய்தவர்.

வேதன் - நான்முகன்.

வேதனை - கந்தம் 5இல் 1. இன்பமும் துன்பமும் கலந்த உணர்ச்சி.

வேந்தன் - அரசன், மன்னன்.

வேந்தன் செயல் - பா. அரசர் தொழில்.

வேந்தனார் - சிவன், எ-டு அவிழ் சடைவேந்தனார் ஒசேந்தனார்.

வேதாகமம் - பிரணவத்தின் விரிவு, கடவுளின் அருட்கொடை, அறிவுக்கருவி. 12 திருமுறைகளும் வேதாகமங்களின் விளக்கமே.

வேதாங்கம் - வேதக் கருவிநூல். எ-டு மெய்ந்நூலின் வழிபுடையாம் அங்க வேதாங்கம் (சிசிபப 216) 2) சிட்சை, வியாகரணம், சந்தகம், நிருத்தம், சோதிடம், கற்பம் என ஆறு.

வேதாந்தம்,வேதாந்த சூத்திரம் - உபநிடதங்கனை எல்லாம் ஆராய்ந்து வியாச முனிவர் இயற்றிய நூற்பா பிரம மீமாஞ்சை வேதாந்தம் எனப்படும். இது உத்தர மீமாஞ்சை சாரீரக, மிமாஞ்சை என இரு வகை. இது 4 அத்தியாயங் களையும் 550 நூற்பாக்களையுங் கொண்டது. இரண்டாம் அத்தியாத்தில் சாங்கியம் முதலிய புறச் சமயப் பகை நீக்கமும் மூன்றாம் அத்தியாத்தில் வித்தியாசமான நிர்ணயமும் நான்காம் அத்தியாயத்தில் ஞான சாதன பலனாகிய வீடு பேறும் கூறப் பெறுகின்றன.

வேதாந்த வாதிகள் - பாற்கரியன், மாயாவதி, சத்தப்பிரமவாதி, கிரீடாப் பிரமவாதி.

வேதாந்தி - 1) அத்துவைதி 2) உத்தர மீமாஞ்சையாகிய வேதாந்தக் கொள்கையினர்.

வேதிப்பான் - வேறாக்குபவன்.

வேதியன் - 1) கடவுள் 2) அந்தனன்.

வேர்ப்பு - வேர்.

வேள் - மன்மதன்.

வேள்வி - கன்ம வேள்வி, தவ வேள்வி, செப வேள்வி, தியான வேள்வி, ஞான வேள்வி என ஐந்து வகை.

வேற்றுச் சமயக் கொள்கை - சைவ சமயத்திற்கு மாறான கொள்கை. இதில் உலகாயதம், பெளத்தம்,சமணம், சாங்கியம் முதலியவை அடங்கும்.

வேறாதல் - 3முக்கிய இயல்புகளில் ஒன்று. பொருள்தன்மையால் வேறாதல் கண்கள் இயங்கக் கதிரவன் ஒளி தேவை. ஆனால், கண்களிலிருந்து

245