பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேறிசை

வைப்பு முறை


கதிரவன் வேறுபட்டது. அது போல, ஆன்மா இயங்க இறைவன் வேண்டும். இருந்தாலும் ஆன்மாவிலிருந்து இறைவன் வேறுபட்டவன்.அதாவது, தானேயாய் நிற்றல்.

வேறிசை - வேற்று. எ-டு: வேறிசை பெண்ணொடு (சிசிபப 45)

வேறு - மாறு, அந்நியம்.

வேறு ஐந்து - வேறாகிய எஞ்சிய சத்தாதி 5, வாசனாதி 5, உட்கருவி 4, புருடன் வளிகள் 10 ஆகிய 25 கருவிகள்.


வை

வை - வைக்கோல்.

வைகரி - செப்பல், திரிபடைவது. எ-டு: வைகரி செவியில் கேட்ப (சிசிசுப 40).

வைகாரிகம் - சத்துவ குணமும் இராசத குணமும் மேலிட்டது. அல்லது இனம் மலி சேத்திராதியையும் கன்ம இந்திரியத்தையும் தருவது (சிசிசுப 150).

வைகுண்டம் - பரமபதம். திருமால் உலகம்.

வைச்சநதி - அணிந்துள்ள கங்கை,

வைசேடிகம் - கணாதரால் நிறுவப்பட்ட சமயம். வைசேடிகர் - ஆன்மா சடப் பொருள் என்னுங் கொள்கையினர்.

வைணவம் - வைணவ ஆகம வழிப்பட்ட சமயம்.

வைணவ ஆகமம் - திருமாலைச் சிறப்பித்துக் கூறும் ஆகமம். அதின் வழிபட்ட சமயம் வைணவ சமயம்.புராணங்களாலேயே பழம் பெருமையுடன் விளங்குவது. வைணவ ஆக மங்களில் பாஞ்ச்ராத்திரம் என்னும் ஆகமமே பெரும்பான்மை வழக்கு பெற்றதால், வைணவ மதம் பாஞ்சராத்திர மதம் எனப்படும்.

வைணவர் - வைணவ சமயத்தினர்.

வைதன்மியம் - ஒப்பின்மை.

வைதன்மிய திட்டாந்தம் - இயலாத விடத்தில் ஏது இன்மையைக் குறித்த திருட்டாந்தம்.

வைதிகம் - வேதநெறி. எ-டு: சைவம் வைணவம்.

வைதிகர் - வேதத்தை நன்கு உணர்ந்தவர். ஆயினும், அதற்கண் கூறப்படும் பொருளை மலைவின்றி உணர இயலாதவர்.

வைதிகவினை - வினை 5இல் 7. வேள்வி முதலியன செய்தல். பிரதிட்டாகலையில் அடங்கும் அசுத்த போகங்களைத் தரும்.

வைநாயிகராவார் - மலம் நீங்கி வீடு பேறு பெறுபவர்.

வைபாடிகம் - பெளத்த சமயப் பிரிவு நான்கில் ஒன்று.

வைபாடிகன் - வைபாடிகச் சமயத்தவன்.

வைப்புத்தலங்கள் - உண்டாக்கிய தலங்கள். இவை 79. நமக்கு நன்கு அறிமுகமானவை: தஞ்சாவூர், காசி, குமரி, தவத்துறை, நாங்கூர்,பேரூர், வழுவூர். இவை திருமுறைகளில் இடம் பெற்றுள்ளன.

வைப்பு முறை - நூலாசிரியர் தாம் யாக்கும் நூலில் தாம் கூற விரும்பும் பொருளைத் தொகை வகை செய்து வைக்கும் பாங்கு எடுத்துக்காட்டாக, மெய்கண்டநூல்களில் மெய்ப் பொருள் வைப்பு முறை மாறு படுகிறது. சிவஞான போதத்தில்

246