பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமையும்

அராகாதி

அமையும்- போதும்.

அயம் - இரும்பு.

அயர்ந்தனை - மறந்தாய்.

அயரா அன்பு - மறவா அன்பு,பா. அன்பு.

அயராமை - மறவாமை.

அயலினார் - எதிர்தரப்பினர். அயலார், எ-டு வாதியை அயலினார் மறுதலைத்து அருள் தர (சநி2)

அயன் - பிரமன், திருமால்.

அரக்கு - மெழுகு.

அரசர் - சேரன்,பாண்டியன்.

அரசர் குழு - பா. ஐவர்குழு

அரசர் கொடி - சேரன்-வில். சோழன்-புலி. பாண்டியன் -மீன்.

அரசர்க்குத் தானை - களிறு, தேர், பரி, வாள், வில், வேல்.

அரசர்க்குத் துணைவர் - பா.எண் பேராயம்.

அரசர் தொழில் - ஈதல், உலகு புரத்தல், ஒதல், படைபயிறல், பொருதல், வேட்டல்.

அரசர்மாலை - சேரன் - பனம்பூ , சோழன் ஆத்தி, பாண்டியன் - வேம்பு.

அரசு - அரசன், சமயக்குரவர் எழுவருள் ஒருவர். அங்கம் 6 இல் ஒருவர்.

அரசின் பத்துறுப்புகள் - பெயர், நாடு, வாழும் ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, மாலை, கொடி. இவை திருவாசகத்தில் கூறப்பட்டிருப்பவை.

அரணம் - 1. அரண், கோட்டை எ-டு வந்து இருக்க வல்லான் மதியாதார் வல் அரணம் (நெவிது 30) 2. முப்புரங்கள்.

அரண் - அங்கம் 6 இல் ஒன்று.

அரண்நால்வகை - மலையரண், காட்டரண், மதிலரண், நீரரண்.

அரணி - தீக்கடைகோல், எ-டு அரணியில் உதித்த கனல் (சநி4) .

அரந்தை - துன்பம்.

அரவக்கச்சு - பாம்புக்கச்சை இடுப்பில் சிவன் அணிந்திருப்பது.

அரவு - பாம்பு.

அரன் - சிவன், இறைவன்.

அரன் உடைமை - சிவனுக்கு உடைமை ஆதல்.

அரன்கழல் - இறைவன் திருவடி அரன்வினை - அநாதியாக இருந்து தொழிற்படுதல்.

அர்க்கியம் - தலையில் நீர்விடல் வழிபாட்டு முறைகளில் ஒன்று.

அர்ச்சித்தல் - பூசனை செய்தல்.

அர்த்தகிரியாஸ்திதி - அறிவுக்கே ஏற்புடைமை.

அர்த்தம் - பொருள்.

அர்த்தப் பிரபஞ்சம் - பொருள்.

அர்த்த வேதம் - உபவேதம் 4இல் ஒன்று.

அர்ப்பணம் - ஒப்பு வித்தல், எ-டு ஈசுராப்பணம்.

அராகத்துவம் - வித்தியா தத்துவங்கள் 7 இல் ஒன்று.

அராகம் - விருப்பம். அசுத்த தத்துவம் 7இல் ஒன்று. ஆணவ விளைவுகளில் ஒன்று. விழைவாற்றலை உண்டாக்குவது. வித்தையிலிருந்து தோன்றுவது. அராகாதி, அராகதி, அராகமாதிவிருப்பம் முதலிய குணங்கள் எ-டு 1. அராகாதி குணங்கள்