பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருவிடங்கள் அலைகடல் கடைந்தும்

அருவிடங்கள் - கொடிய நஞ்சு கள். எ-டு ஒளடதம் மந்திரம் உடையார்க்கு அருவிடங்கள் ஏறா (சிசிசுப 309)

அருவினை உடல் - அரிய வினை கொண்ட உடம்பு. இதில் அறிவினால் ஆவி அறி யும். எ-டு அருவினை உடலுள் ஆவி அறிவினால் அறியும் அன்றே (சிபி 53),

அருவுடம்பு - நுண்ணுடல்

அருவுயிர் - பிரளயாகலர், விஞ்ஞானகலர்.

அருவுருவம் - 1.அசத்தும் சத்தும் இருப்பதும் இல்லாததும் 2. இறைவன் மூன்று திருமேனி களில் ஒன்று.

அருவுருவத்திருமேனி- சதா சிவன் .

அருவேல் - திருமேனி அருவம்.

அருள் - இரக்கம், திரோதன ஆற்றல், திருவடி, சிற்சத்தி,

அருள் ஆர் - அருள் நூல்களில் பேசப்படும்.

அருள் ஆற்றல் - பராசத்தி, திரோதன சத்தி, இச்சாசத்தி, ஞான சத்தி, கிரியா சத்தி என ஐவகை.

அருள் உரு நிலை - சிவன், குரு உரு கொள்ளும் நிலை.

அருள் கிரியை - அருட்செயல்.

அருள் நீர்மை - சிவ அறிவு.

அருள் நூல் - வேதாகமம். அருளுதல் - கருணை காட்டல்

அலகில் - அளவிலா எ-டு அலகில் நிகழ்போகங்கள்

அலகில் குணம் - அளவிறந்த பண்பு. பிரகாசம், இலகுதை, வியாபிருதி, கெளரவம், அநி யமம் முதலியவை. 34க்குமேல்விரிதல். அவையாவன. உறுதி முதலியவை 34 பற்று முதலி யவை 9. விருப்பமின்மை முதலியவை 9.

அலகு - இயல்பு, அளவு, கூரி, வாள்

அலகு இறந்த - அளவிலா, எண்னிறந்த

அலகை - பேய் எ-டு அலகைத்தேர்.

அலங்காரம் - அழகு, அணி

அலமருவோர் - செல்வோர்.

அலமாரும் - சுழற்சியுற்று.

அலமாருவோர் - சுழல்வோர்.

அலர் - மலர்தல்,

அலர் சோகம் - மலர்தலும், வாடுதலும்,

அலர்த்துதல் - மலரச்செய்தல், அல் இருள்-இரவிலுள்ள அடர் இருட்டு,

அல்குல் - பெண்குறி, பக்கம்.

அல்லமப் பிரபு - வீரசைவத்தை நிறுவியர்களில் ஒருவர்.

அல்லல் - துன்பம்.

அல்லன - அல்லாதனவை,வேறு.

அல்லார் - அல்லாதவர்.

அலி - பேடி

அலிங்கம் - குறியற்றது. ஒ. இலிங்கம்.

அலுப்த சத்தி - பேரருள் உடைமை

அலைகடல் கடைந்தும் - தேவர்களுக்கு நித்தியத்துவம் ஏற்பட வேண்டி மகாமேருவை மத்தாகவும், வாசுகியை நாணா கவும் கொண்டு கடலைக் கடைந்து, அமுதம் தோற்று வித்துத் தேவர்களுக்குக் கொடுத்தவன் மாயவன்.21