பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவத்தை

அவ்பயத்தம்


அகக்கருவி 4 புருடன் 1 வளி 10 ஆக 35

2. கனவு கண்டம் ஐம்புலன் 5 தொழிற்புலன் 5 அகக்கருவி 4 புருடன் 1 வளி 10 ஆக 25

3.சுழுத்தி இதயம் பிராணன் 1 சித்தம் 1 புருடன் 1 ஆக 3

4.துரியம் நாபி பிராணன் 1 புருடன் 1 ஆக 2

5.துரியாதீதம் மூலாதாரம் புருடன் 1

அவத்தையில் ஆன்மா நிலை : சாக்கிரம் முதலிய ஐந்து காரிய அவத்தையில் ஆன்மா புருவ நடுவினின்று முறையே கண்டம் (மிடறு,இதயம்),நாபி (உந்தி), மூலாதாரம் என்னும் இடங்களில் இறங்கி நிற்கும். பின் அம்முறையே மேல் ஏறிப் புருவ நடுவை அடையும்.

அவத்தைக்குரிய கருவிகள் : இவை 96. இவற்றில் 35 மட்டுமே அவத்தைக்குரியவை. இவற்றில் 15 தத்துவமும் 20 தாத்துவிகமும் சார்ந்தவை.

தத்துவம் 15:1, அறிவுப்பொறி 52, தொழிற்பொறி 53, அகக் கருவி 44, புருடன் 1

தாத்துவிகம் 20 : 1. அறிவுப் பொறிப்புலன் 52. தொழிற் பொறிப்புலன் 53 வளி 10 ஆக 15 + 20 = 35.

அவத்தை வேறுபாடுகள் : கருவிகள் கூடியும் குறைந்தும் வினையாற்றுவதால், இவை ஏற்படுகின்றன. அகக்கருவிகள் 35. இவற்றில் தாத்துவிகம் 20

அவதாரம் - தெய்வப் பிறப்ப இறை வனுக்கே உரியது இறைவன் பல திருப்பிறப்புகள் எடுப்பவன்.

அவயவம்- உறுப்பு 2. தனித்தனிப் பிரிக்கும் தன்மை உடையது.

அவயவப் பகுப்பு - கூறு கூறாகப் பிரித்தல். எ-டு உலகம் அவயவப் பகுப்பு உடையது. அவன்,அவள்,அது.

அவயவி - உறுப்புடையது.

அவயோகம் -சிவயோகம் அல்லாதது பா.சிவயோகம்

அவர்கோன் - இந்திரன்.

அவற்று -ஐம்புலன்கள்.

அவன் -இறைவன், அடியார்.

அவன், அவள், அது -ஒருவன், ஒருத்தி, ஒன்று.

அவனி- உலகம்.

அவனி தத்துவம் -உலகக் கொள்கை எ-டு அவனி தத்துவம் ஒன்று (சிசிசுப 259)

அவ்யாப்தி -அழுக்காறு.

அவ்வவ் இந்திரியம் - பொறிகள்.

அவ்வளவின் மகிழ்தல் -பெற்றுள்ளது கொண்டு,பெற வேண்டியதை நினையாது மகிழ்தல், நியாயம் மூன்றில் ஒன்று.

அவ்பயத்தம் - வெளிப்படாமை. எ-டு மாயையின் அவ்வியத்தம் (சிசிசு 39) 2. பீடத்

23