பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அளவை விளக்கம்

அளவை இயல்


எண்வகை: காட்சி கருதல், உரை, உவமானம் அருத்தா பத்தி (பொருள்), அபாவம் (இன்மை) ஐதிகம், உண்மை.

அளவை விளக்கம்-மெய்யறிவு ஆராய்ச்சியில் பயனபடுங்கருவிகள் யாவும் அளவை எனப்படும். காட்சி: ஐயம் திரிபில்லாமலும் விகற்பம் இல்லாமலும் ஆசற அறிவது. இது வாயில் காட்சி, மானதக் காட்சி,தன்வேதனைக் காட்சி, யோகக்காட்சி என நால்வகை கருதல் : அவினாபாவம். பேசுறும் ஏது கொண்டு மறை பொருள் பெறுவது. அதாவது, உய்த்தறிவது. இது தன் பொருட்டு, பிறர் பொருட்டு என இருவகை உரை : கருதலிலும் காட்சியிலும் அடங்கிடாப் பொருளைக் காட்டுவது. இது தந்திரம், மந்திரம், உபதேசம் என மூவகை இம்மூன்றனுள் கருதல ளவையே ஆராய்ச்சி எனக் கொள்ளப்படுவது. சிவஞான போதத்திலும் இவ்வளவையே பிரமாணமாகக் கொள்ளப்படுவது. இவ்வளவை ஏது பற்றியே ஆராய்வது. இம்மூன்றளவைகளில் அறியப்படும் பொருள்களின் இயல்பு இருவகைப்படும் 1. பொது .இயல்பு : தடத்த இலக்கணம். நூல்நிலை 2. சிறப்பியல்பு : சொரூப இலக்கணம். சூக்கும நிலை. இவ்விரண்டிலும் மன்னிய பொருள்களும் காட்சி முதலிய அளவைகளும்அடங்கும் இவ்வாறு இலக்கணம் கூறும் பொழுது, அவ்யாப்தி, அதி வியாப்தி, அசம்பவம் என்னும் மூன்று குற்றங்கள் இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும். பொது இயல்புக்குப் பசுவும் சிறப்பியல்புக்குக் கபிலைப் பசுவும் சான்று ஆகும். அறிவியலில் பசு என்பது பொது இனப்பெயர். கபிலைப் பசு என்பது சிறப்பினப் பெயர். மனிதனைக் குறிக்கும் அறிவியல் பெயரான ஓமியோ சேப்பியன்ஸ் என்னும் இரு பெயரில் ஓமியோ என்பது பொதுப் பெயர். சேப்பியன்ஸ் என்பது சிறப்புப் பெயர். உயிரியலில் சிறப்புப் பெயர் இருந்தாலே ஒர் உயிரினத்தை அதன் இனங்கண்டறிய இயலும்,

அளவை இயல்-தர்க்கம். அளவை நூல். முறைப்பட எண்ணுதலை ஆராயும் மெய்யறிவுத் துறை அறிவியலுக்கு அடிப்படையாக இருப்பது.

அளவை முறைகள்:பிறர் கொள்கைகளை மறுத்துரைக்கவும் தன் கொள்கைகளை நிலை நாட்டவும் இவை பயன்படுபவை. மெய்கண்டார் பிற சமயத்தார் கூற்றுகளை இம் முறைகளில் நுணுகி ஆராய்ந்து மறுப்பது போற்றி மகிழ்தற் குரியது.

அளவை விளக்கம் : அளவை பற்றிய தமிழ் நூல். மறைஞான தேசிகர் தம் கூற்றுகளுக்கு இதிலிருந்து மேற்கோள் காட்டுகின்றார். இதில் இடம் பெறுவன: 1. பிரமாணம் 2. சிற்சித்தி 3.பிரத்தியட்சம் 4 அனுமானம் 5.சப்தப்பிரமாணம் 6.அறிவின் ஏற்புடைமை 7 அன்யதாக்கியாதி 8. மெய்ம்மைக் கொள்கை

26