பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவறியா மெய்

அறிவின் ஏற்புடைமை


சோறு 15. சுண்ணம் 16. சோலை 17. தண்ணிர்ப்பந்தல் 18. தலைக்கெண்ணெய் 19. தடம் 20. தின்பண்டம் நல்கல் 21. நாவிதர் 22. நோய்க்கு மருந்து 23. பசுவுக்கு வாயுறை 24 பெண் போகம் 25. பிறர் துயர் காத்தல் 26. மடம் 27.மகப் பெறுவித்தல் 28. மகவு வளர்த்தல் 29. மகப்பால் வார்த்தல் 30. வண்ணார் 31. விலங்கிற்குணவு 32. விலைகொடுத்து உயிர்காத்தல்.

அறிவறியா மெய் -மெய்ப் பொருள்

அறவியல்-அறம்பற்றிக் கூறும் மெய்யறிவுத்துறை பா. அறிவியல் நல்லன செய்வதையும் அல்லன தவிர்ப்பதையும் எல்லைப் படுத்துவது. தமிழ் முதல் நூலாகிய சிவஞான போதத்தில் 8-12 நூற்பாக்களின் உட்பொருள் அற இயலும் சமய இயலும் பற்றியதே. பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிவு காட்டும் இவ் வன்பை அடிப்படையாகக் கொண்டது சைவநெறி கடந்த நிலை அறவியலும் சைவ சித்தாந்தத்திற்குரியதே. இதனைப் போது அறத்தின் மலர்ச்சி எனலாம்.

அற்புதம் - 1. அதிசயம். எ-டு இறைவன் திருவிளையாடல் 2.சுவை9இல் ஒன்று 3.சூனியம்

அற்ற - இல்லாத

அற்றம் -சோர்வு நிலை

அற்று-அவ்வியல்பு இல்லாதது.

அறிஞர் - கற்றறிவாளர். எ-டு அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம் (திஅப 5)

அறிஞர்பெயர்-ஆன்றோர், சான்றோர்,ஆய்ந்தோர் உயர்ந்தோர்.

அறிவற்றம் -அறிவின் சோர்வு

' அறிவன் - இறைவன்.

அனைத்தையும் அறிபவன் அறிவியல் -விஞ்ஞானம். அவ்வக்காலத்து அறிபவற்றை முறைப்படுத்திக்கூறும் அறிவுத் துறை. இக்காலத்து நன்கு வளர்ந்துள்ள துறை. உயிர்ப் பொருள் அறிவியல், இயற் பொருள் அறிவியல், சமூக அறிவியல் என மூவகை. இதற்குத் தந்தை மெய்யறிவியல் தாய் கணக்கு

அறி.அறிவு - ஆன்மா

அறிகருவி-கண் காது என்னும் ஐம்பொறிகளில் இரண்டு.

அறிதுயில் -யோக நித்திரை.(சிலப்பதிகாரம்)

அறிவின் ஏற்புடைமை -இன்னதை அறிவு என்று ஏற்றல், அளவை இயல் சார்ந்தது. தன்னைக் கொண்டு வருதல், பிறிதைக் கொண்டு வருதல் என்னும் இரு நிலையில் அறிவு அளவையில் செய்யப்படும் ஆய்வு. இந்தியத் தத்துவக் கொள்கைகள் பெரும்பாலும் இவ்விரண்டினுள் அடங்கும். இந்த ஏற்புடைமை சமயத்திற்குத் தகுந்தவாறு வேறுபடும். 1.தகுந்த சான்று கிடைக்கும் வரை அறிவை மெய்ம்மை என்று ஏற்க இயலாது என்பர் பெளத்தர். பருப்பொருள் அறிவியலுக்கு (இயற்பியல், வேதிஇயல்) இது பொருந்தும் 2.மெய்ம்மை, பொய்ம்மை எனக் கண்டறிவதற்கு வேறுவகையில் செயல் முறையில் சரி பார்க்க வேண்டும். இதற்குச் சம்வாதி பிரவர்த்தி என்று பெயர்.

28