பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவு

அறுசமயம்


 பயனில்லை எனில் பொய்யெனத்துணிவது பயன் உண்டு என்றால் மெய்யென ஏற்பது. இவ்வாறு பிறிதொன்றினைக் கொண்டு அறிவின் ஏற்புடைமையை நையாயிகர் உறுதி செய்வர். 3.தன்னிலேயே அறிவு மெய்ம்மை உடையது என்றும், பொய்ம்மை புறக் காரணத்தால் ஏற்படுவது என்றும் மீமாம்சகர் கூறுவர். கடவுளை ஏற்காமல் வேதத்தை ஏற்பதால், வேதத்தின் மெய்ம்மையை அறிவிலேயே இருப்பதாக இவர்கள் கருத வேண்டி இருக்கிறது. 4.தன்னால் கொண்டு வருதலைச் (ஸ்வதப் பிராமானியம்) சைவ சித்தாந்தம் ஏற்பது. சிவஞான முனிவர், சித்தியார் சுபக்க உரையில் இதனை நன்கு விளக்குகிறார். 5.மெய்யறிவு அதன் பயன்படும் செயலால் அறியப்படும். பொய்யறிவு அவ்வாறு இல்லை என்பதை ஏற்புடைமைக்கு உரை கல்லாகக் கொள்வது தவறாகும். இவ்வுரைகல் இறந்த காலம், வருங்காலம் ஆகியவை பற்றிய அறிவுக்கும் பொருந்தாது என்பது சைவ சித்தாந்தக் கொள்கையாகும்.

அறிவு -அறியப்படுவது. நல்லறிவு, அல்லறிவு என இரு வகை அறிவுப்பாகுபாடு 1. இருவகை நூலறிவு இயற்கையறிவு; சுட்டறிவு முற்றறிவு பொய்யறிவு மெய்யறிவு; அபர ஞானம்; பரஞானம். 2.மூவகை: பசுஅறிவு,பாசஅறிவு,பதியறிவு. இவ்வறிவுகளில் அழியாதது பதியறிவாகிய இறையறிவே, ஏனெனில், இறைவன் என்றுமிருப்பவன். இதை மெய்கண்டார் கூற்று உறுதி செய்யும்.

“இருதிறனல்லது சிவவத்தாம் என இரண்டு வகையின்இசைக்குமன் உலகே' (சிபோ நூபா 6)

அறிவு அறியா மெய் - சுட்டறிவினால் அறியப்படாத மெய்ப் பொருள்.

அறிவுப் பொறிகள் -ஐம் பொறிகள். ஒ: தொழிற் பொறிகள்.

அறிவு விளக்க இயல் - அறிவு அளவியல், அறிவுக் கொள்கை பற்றி ஆராயும் மெய்யறிவுத் துறை.

அறிவுறுத்தல் - நன்குணரச் செய்தல்.

அறு - ஆறு, அறுத்தல். எ-டு.அறுவகைத் தொழில்

அறுகாரியம் -பா.ஆறுகாரியம்.

அறுகுணம் - செல்வம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறு.

அறுகோணம் -ஆறு மூலைகளைக் கொண்ட கோணம். காற்று அறுகோண வடிவம். அறுகோணம் கால் (உவி 5)

அறுசமயம் -ஆறு என்னும் எண்ணிக்கை யிலுள்ள நான்குவகைச் சமயங்கள் (4 X 6 = 24) அவை அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறப்புறச் சமயம் என நான்கு வகை. பொதுவாகக் கூறின் ஆறு. சைவம், வைணவம், சாத்தம், செளரம், காணபத்தியம், கெளமாரம். இவ்வாறில் தலை சிறந்தது சைவமே,

29