பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அறு(வகை) அகச்சமயம்

அனந்த தேவர்


அறு(வகை) அகச்சமயம் - பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவ சங்கிராந்த வாத சைவம், ஈசுர அவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம்.

அறு(வகை)அகப்புறச்சமயம்-பாசுபதம், மாவிரதம், காபாலிகம் (காளாமுகம்), வாமம், வைரவம், ஐக்கிய வாத சைவம் . அறு(வகை) உயிர் - மக்கள், தேவர், பிரமா, நரகர், விலங்கு, பேய்.

அறு(வகை) புறச்சமயம்-தருக்கம், மீ மாஞ்சை, ஏகான்ம வாதம், சாங்கியம் யோகம்,பாஞ்சராத்திரம்

அறுவகைப்) புறப்புறச் சமயம் - மாத்தியமிகம், யோகாசாரம், வைபாடிகம், செளத்திராந்திகம் (இந்நான்கும் பெளத்தம்) உலகாயதம், ஆருகதம்,

அறுசுவை - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு கார்ப்பு, கைப்பு.

அறுத்தவர் - சிறுத்தொண்ட நாயனார் 2 அரிவாட்டாய நாயனார்

அறுதொழில்கள் - கந்தம், ரசம், ரூபம், பரிசம், சத்தம், பரிணாமம்.

அறுநிலை - வைணவம், சமநிலை, வைசாகம், மண்டலம்,ஆவிடம், பிரத்யாலிடம்,

அறுபகை - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என ஆறு.

அறுபடை வீடு - திருப்பரங்குன்றம், திருச்செந்துர் (திருச்சீரலைவாய்), பழநி (திருவாவினன் குடி), சுவாமி மலை (திருவேரகம்), திருத்தணி (குன்றுதோறாடல்) பழமுதிர் சோலை (அழகர் கோயில்)

அறுபத்து முவர் - பெரிய புராணத்தில் கூறப்பெற்ற 63 நாயன்மார்கள். இவர்களில் வேளாளர் 13 பேர், மறையவர்12 பேர், வணிகர் 5 பேர், ஆதி சைவர் 4 பேர், அரசர் 7 பேர், குறுநில மன்னர் 3 பேர்,யாதவர் 2 பேர், குலம் தெரியாதவர் 6 பேர், ஏனையோர் 11 பேர். ஒருவர் ஆதிதிராவிடர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறுபத்தைந்து-போலி 65.பா.போலி, -

அறுபுள்ளி-காற்று அறுபுள்ளி வடிவம். குன்றா அறுபுள்ளி கால் (உவி 7)

அறுபொருள் - சீவம், புற்கலம், தர்மம், அதர்மம், ஆகாசம், காலம் எனும் ஆறு தத்துவங்கள்

அறுவழக்கு - இவ்வாறு வகை வழக்கும் பெளத்த சமயத்தில் கூறப்படுபவை. இல்வழக்கு, உள்வழக்கு, உள்ளது சார்ந்த இல்வழக்கு, உள்ளது சார்ந்த உள்வழக்கு, இன்மை சார்ந்த இல்வழக்கு, இன்மை சார்ந்த உள்வழக்கு. -

அறுவை - ஆடை எ-டு: செழு நவை அறுவை சாணி (சிசிசுப 142) -

அறை - கூறு, இடம்

அறைகுவன் - கூறுவேன்.

அனந்ததேவர்-அட்டவித்தியே சுரருள்ளே தலைவர் அழிவில்லாத தேவர். அசுத்தமாயா காரியங்களைச் செய்பவர்.30