பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகப்பிரமாணம்

ஆசமனம்


ஆக்கினேயம் 15.வீரம் 16 ரெளரவம் 17.மகுடம் 18, விமலம் 19. சந்திர ஞானம் 20. முகவிம்பம் 21, புரோற்கீதம் 22இலளிதம் 23,சித்தம் 24 சந்தானம் 25 சர்வோக்தம் 26.பாரமேசுரம் 27.கிரணம் 28. வாதுளம்.

ஆகமப்பிரமாணம் - உரையளவை. அளவை 8 இல் 1.நிலைபெற்ற முதல்வனுடைய திருமுன்,உயிர்கள் தத்தம் தொழிலைச் செய்யும் என்பது இப்பிரமாணம் எ-டு: மன்னு சிவன் சந்நிதியில் மற்று உலகம் சேட்டித்து (சிபோ பா 3:1).

ஆகமலிங்கப்பிரமாணம்-பா.உரையால் அனுமானம்.

ஆகமாந்தம் -ஆகமங்களின் முடிவாகக் கொள்ளப்படும் சித்தாந்தம்.

ஆக்கச் சொல் -உணர்த்தும் சொல்

ஆக்காது - படைக்காது.

ஆக்கில் - படைக்கில்.

ஆக்கினேயம் - 1.நெருப்பி லிடல் 2 ஆகமம் 28இல் ஒன்று.

ஆக்குதல்-1படைத்தல் 2சாக்கிர அவத்தையில் செலுத்துதல்.

ஆக்கினை - கட்டளை, தண்

ஆக்கை -யாக்கை,உடல் எ-டு.அவித்தை கொடு ஆக்கை

ஆகாச(ய)ம் - வான், வெளி. பூதங்கள் 5 இல் ஒன்று. தத்துவம் 6 இல் ஒன்று. ஓசையி லிருந்தும் சுத்தத்திலிருந்தும் தோன்றுவது.

ஆகாமியம்-வருவினை அல்லது பின்வினை. அதாவது, இப்பிறப்பில் செய்யும் புண்ணிய, பாவங்கள்,ஊழ்வினை மூன்றில் ஒன்று. புதிதாகச் செய்யும் செயல் ஆகாமியம்.அது பின் சஞ்சித மாகவும் பிராரத்தமாகவும் வரும்.

ஆகாமியக்கன்மம் - பின்செய் கன்மவினை.

ஆகாயக் கூத்தாட்டு -வானக்காற்றுடன் குடக்காற்று சேரும் நிகழ்ச்சி,எ-டு குடகாய ஆகாயக் கூத்தாட்டாம் (சிபோ LIIT 14)

ஆகாயப்பூ -இல் பொருள் வழக்கு.

ஆகுதி -1.நெருப்பில் மந்திர முழுமையாகச் செய்யப்படும் ஓமம் 2.தெய்வத்திற்கு இடும் பலி.

ஆங்கு -அவ்விடத்து,அது போல.

ஆங்காரம் - யான் என்னும் தன் முனைப்பு, காட்சியால் பட்டதை இன்னது என்று துணிவதற் குரிய எழுச்சியை உண்டுபண்ணுவது.புத்தியில் தோன்றுவது;அகந்தைக்கு வித்து.ஆங்கார வகை : 1.தைசத ஆங்காரம். இதில் மனமும் ஐம்பொறிகளும் உண்டாகும். 2.வைகாரிக ஆங்காரம்.இதில் ஐந்து தொழிற்பொறிகள் உண் டாகும். 3.பூதாதி ஆங்காரம். இதில் ஐம்புலன்கள் தோன்றும் ஐம்புலன்களிலிருந்து ஐம்பூதங்கள் தோன்றும் பிரகிருதியிலிருந்து அகக் கருவிகள் உண்டாகும் (சிசிசு பl49)

ஆச்சிரமம் -பொறிவழிச் சேரல், கன்மத்தொடர்ச்சி

ஆசமனம் -வழிபாட்டு முறைகளில் ஒன்று.வலக்கையால்மும் முறை மந்திரநீர் உட்கொள்ளல்.

35