பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆதினங்கள்

ஆயகலைகள் 64



ஆதீனங்கள்- மடங்கள்.இவை சைவம் வளர்ப்பவை.தமிழ் நாட்டில் 18 மடங்கள் உள்ளன. தருமை ஆதீனம்,திருப்பனந்தான் ஆதீனம்,துறை ஆதீனம் ஆகிய மூன்றும் முதன்மையானவை.

ஆதீனகர்த்தா-ஆதீனத்தலைவர், மடாதிபதி.

ஆபாச வாதம் - அளவுக்குள் அடங்கி வெளிவருதல்,முடிந்த முடிபான தத்துவமான பரம சிவன்தன்னை ஒரளவுகொஞ்சமாக வெளியிடல்.

ஆம்பு-தந்திரம்,எ-டு ஆம்பின் பித்துரைத்து (சிசி பப 101)

ஆம்பொழுது-ஆகின்றவேளை.

ஆமா - காட்டுப்பசு

ஆமையாரைத் தகர்த்து ஒடு தரித்தார் - பேரழிவுக்காலத்தில் பற்றுக் கோடாக இருந்த மேருமலை சரிந்தபொழுது,திருமால் ஆமை வடிவாய் அம்மலையைத் தாங்கிப் பற்றுக் கோட்டுச் சிலையாய்க் கிடந்து உலகுக்குப் பற்றுக்கோடும் வினைமுதலும் தாமே என்று செருக்குக் கொண் டார்.இதை யறிந்த அயன் ஆமையைத் தகர் த்து,அந்த ஒட்டைஎலும்பு மாலையாக அணிந்தார். ஆகவே,அயனே வினைமுதல் (சிசிபப281)

ஆய-நிலைத்துள்ள எ-டு ஆயகலைகள்

ஆயகலைகள் 64

1.அக்கர இலக்கணம் 2.இலிகிதம் 3.கணிதம் 4.வேதம் 5.புராணம் 6.வியாகரணம் 7. நீதிசாத்திரம் 8.சோதிடநூல் 9.தரும சாத்திரம் 10.யோக நூல் 11.மந்திரநூல் 12.சகுன நூல் 13.சிற்பநூல் 14.மருத்துவநூல் 15.உருவ சாத்திரம் 16.இதிகாசம் 17.காவியம் 18.அலங்காரம் 19.மதுர பாடனம் 20.நாடகம் 21.நிருத்தம் 22.சத்தபிரமம் 23.வீணை 24.வேணு 25.முழவு 26தாளம் 27.ஆத்திர பரீட்சை 28.கனக பரீட்சை 29.இரதப் பரீட்சை 30.கசபரீட்சை 31.அசுவ பரீட்சை 32.இரத்தினப் பரீட்சை 33.பூப்பரீட்சை 34.சங்கிராம இலக்கணம் 35.மல்யுத்தம் 36.ஆகருடனம் 37.உச்சாடனம் 38.வித்து வேடணம் 39.மதன நூல் 40.மோகனம் 41.வசீகரண்ம் 42.இரசவாதம் 43.கர்ந்தருவ வாதம் 44.பைபீலவாதம் 45.கெளத்துக வாதம் 46.தாது வாதம் 47.காருடம் 48.நட்டம் 49.முட்டி

50.ஆகாயப் பிரவேசம்

39