பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆவாகனம்

ஆறுதாது


ஆவாகனம்- எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைத்தல்

ஆவாரக சத்தி- ஆணவ ஆற்றல் 2 இல் ஒன்று அறிவை மறைக்கும் ஆற்றல்,பா. ஆணவம், ஒ. அதோ, நியமிகா சத்தி,

ஆவாரம் - மறைப்பு எ-டு ஆவாரமாய் அசித்தாய் அசலம் ஆகி (சிபி 22)

ஆவி -உயிர், நெட்டுயிர்ப்பு எடு ஆவி ஆறாதே என்று உந்தீஉற (திஉ 31)

ஆவிருதி -ஆணவமலம் எடு ஆவிருதி மறைத்தல். இது. அதற்குரிய இயல்பு.

ஆவேசம் -தன்னை மறந்து ஆவேசிக்கப்படும் பொருளாய் நிற்றல்.

ஆவேசவாதம்-சிவன் ஆவேசித்தலால் தனக்கு எல்லாம் கை கூடும் என்னுங்கொள்கை

ஆவேசவாதி-ஆவேசவாதம்புரிவோன். காபாலிக மதத்தவன்.

ஆழ்விக்கும் அஞ்சு - உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம்.

ஆழி -1. கடல், எ-டு ஆழிசூழ் உலகம் 2. சக்ராயுதம் ஆழிப்படை

ஆள் -அடிமை.எ-டு ஆள் ஆம் (அடிமைமைஆவோம்)

ஆளுதல் - ஆட்சி செய்தல்.

ஆளுமை - ஆளுகின்ற தன்மை, பல பண்புகளின் தொகுப்பு. எ-டு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஆளுமை உண்டு.இதனை உறுதி செய்வது இறைவனே.

ஆறல - வழியில்

ஆறங்கம் - வேதாங்கம்

ஆறத்துவா -ஆறுவழிகள்.

ஆற்றல் - வலிமை. இது பல வகை

ஆற்றாஎழுத்தினான்-வழிபடும் அடியார் விதியானவனான சிவன்,

ஆற்றா எழுத்து-ஒங்காரம் தன் உயர்வினால் உணர்தற்கரியது.

ஆற்றுதல்-வலியடைதல்

ஆறு-வழி முறைமை, ஒழுக்கம், சமயம், பருப்பு, கங்கை

ஆறு எழுத்து- ஓம் நமசிவாய.

ஆறு காரியங்கள் -1. மதம், அராசம், கவலை, தாபம், வாட்டம், விசித்திரம் 2.உழவு, தொழில், விரைவு, வாணிகம், சிட்டை, சிற்பம். ஆறு குணங்கள்- ஆறு பண்புகள் 1. வெண்மை, பொன்மை, செம்மை, நீலம், பச்சை, உண்மை, 2. ஊதா, அவுரி, நீலம், பச்சை, மஞ்சள், சிச்சிலி சிவப்பு என ஆறு நிறங்கள் அறிவியலில் உண்டு.

ஆறு அங்கம்-சிட்டை,கற்பம், வியாகரணம். நிருத்தம், சோதிடம்,சித்தம்

ஆறு எழுத்து - ஓம் நமசிவாய

ஆறு கோடி மயாசத்திகள் -இவை ஆறு பேதமானமியா சத்திகள்.அவையாவன: காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம்

'ஆறு சென்ற வியர்வை- வழி நடத்தலால் உண்டாகும் வியர்வை.

ஆறுதாது -இரத்தம்,சுக்கிலம்,மூளை,தசை,எலும்பு,தோல்,

எ-டு ஆறுதாதுக்களும் கூடி (சிசிபட 227)

42