பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆன்மக்கொள்கை மறுப்பு

ஆன்ம தத்துவம்


ஆன்மக்கொள்கை மறுப்பு- உயிரை ஆன்மா என்பது வைதிக சமயநூல் வழக்கு. சைவ சித்தாந்தம் இதனைச் சதசத்து எனக்குறிக்கும். "மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா (நூ பா 3)

சத்தித்தது ஆன்மா சகசமலத்து உணராது" (நூபா 4)

"இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா" (நூபா 7)

சிவஞான போதத்தில் மேற்குறித்த மூன்று பாக்களிலும் ஆன்மா என்னும் சொல் வருகின்றது. ஆன்மா உண்டு என்று மெய்கண்டார், வாதங்களில் தலை சிறந்ததான சற்காரிய வாதத்தினால் நிலை நாட்டுவது அவர்தம் பேரறிவினைக் காட்டுகிறது. அவர்தம் கொள்கை மறுப்புச் சுருக்கம் பின்வருமாறு: 1."இலது என்றலின் ஆன்மா உளது." இங்குப் பெளத்தரின் சூன்யவாதம் மறுக்கப்படுகிறது. 2."எனதுடல் என்றலின் ஆன்மா உளது." இங்குத் தேகான்மா வாதிகளின் கொள்கை மறுக்கப்படுகிறது. 3."ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது." இங்கு இந்திரியான்ம வாதிகளின் கொள்கை மறுக்கப்படுகிறது. 4."ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது." இங்கு உலகாயதரில் ஒருசாரரான சூக்குமதேகான்ம வாதிகளின் கொள்கை மறுக்கப்படுகிறது. 5."கண்படில் உண்டிவினை இன்மையின் ஆன்மா உளது.” இங்குப் பிராணான்மா வாதிகளின் கொள்கை மறுக்கப்படுகிறது. 6."உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது." இங்குப் பிராணான்மா வாதிகளின் கொள்கை மறுக்கப்படுகிறது. 7.இவ்வாறு உண்டு என்று நிறுவப்பட்ட ஆன்மா உடம்பினுள் உள்ளது. அவ்வுடம்பின் இயல்பை 'மாயா இயந்திரதனு’ என்று மெய்கண்டார் குறிப் பிடுகிறார். இங்குச் சமூகான் மாவாதிகள் கொள்கை மறுக்கப்படுகிறது.

ஆன்ம சித்து- இது தூயது. இதனைத் துகள் உடல் மறைப்பது.

ஆன்மகத்தி-ஆன்மத்துய்மை பத்துச் செயல்களில் ஒன்று. உயிரை அருள் மேவுவதால், சகலமும் நிகழும். குறிப்பாகப் பாரம்அகலும். அறிவு ஆங்கி மன்னிட, வியாபியாய் வான் பயன் தோன்றும்.

ஆன்ம ஞானம்- பசு அறிவு.

ஆன்ம தத்துவம்- இது 24. உட்கருவி 4.அறிவுப்பொறிகள் 5. தொழிற்பொறிகள் 5, ஐம் புலன்கள் 5, பூதங்கள் 5.

1. உட்கருவி: புத்தி, மனம், அகங்காரம், சித்தம்,

2.அறிவுப் பொறிகள் : மெய், வாய், கண், மூக்கு, செவி,

3.தொழிற்பொறிகள் : மொழி, கால், கை, எருவாய், கருவாய்.

4.ஐம்புலன்கள் : ஒசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம்.

5. ஐம்பூதங்கள் : வான், வளி, அனல், புனல், மண்.

அனந்த தேவர் வழி நிற்கும் சீகண்ட உருத்திரர் சகலருக்கும் இறைவர். ஆகவே, அவர் தொழிற்படுத்தும் பிரகிருதி

45