பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆன்ம தரிசனம்

ஆன்ம ரூபம்


மாயையினின்றும் கலையிலிருந்தும் தோன்றும் காரியங்கள் ஆன்ம தத்துவமாகும்.

ஆன்ம தரிசனம்- ஆன்மக் காட்சி. பத்துச் செயல்களுள் ஒன்று. பசு கரணமும் சுட்டறிவும் நீங்கித் தன்னை உள்ளவாறு காணல்.

ஆன்ம நிலை . இது மூன்று. அவை பின்வருமாறு:

1. கேவல நிலை : ஆணவத்தோடு மட்டும் ஆன்மா இருக்கும். இதில் ஆன்மா சிறிதும் அறிவின்றிப் பருப்பொருள்போல் இருக்கும்.

2.சகல நிலை : மும்மலங்களும் சேர்ந்திருக்கும் நிலை. இதில் ஆன்மா அறிவைச் சிறிது பெற்று உலகியலில் ஈடுபடும். வினைகளை அது ஈட்டுதலும் அவற்றின் பயனை நுகர்தலும் இந்நிலையிலேயே. இந்நிலையில் ஆன்மா ஒன்றையறிதலும் அறிந்ததை மறத்தலும் ஆகிய இரண்டினையும் உடையது. அந்நினைப்பு மறப்புகளையும் நூல்களில் சகலம், கேவலம் என்பர். இந்நிலையில் ஆன்மாவிற்கு வரும் உறக்கம், விழிப்பு ஆகிய இரண்டும் முறையே கேவலம் சகலம் எனப்படும். இவற்றுள். விழிப்பு நிலை மகா சகலம் அல்லது மாசகலம் எனப்படும். காரிய அவத்தை ஐந்தனுள் சாக்கிரம் எனப்படுவது இதுவே.

3.சுத்த நிலை : இது ஆன்மா தூய்மைபெறும் நிலை.

கேவலம், சகலம், சுத்தம் ஆகிய மூன்றும் காரண அவத்தைகள். சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் ஆகிய ஐந்தும் காரிய அவத்தைகள்.பா. ஆன்ம அவத்தை ,அவத்தை

ஆன்ம பயன்- 1. ஆன்மா தன் பொருட்டு ஐம்பொறிகளைச் செலுத்தும் ஆன்மாக்களைச் சிவன் அவற்றின் பொருட்டாகவே சங்கற்ப மாத்திரையால் செலுத்துவான்.

2.இயல்பாகவே பாசங்களோடு கூடித்தூய்மையின்றி நிற்பது ஆன்மா. சிவன் அவ்வாறின்றி, இயல்பாகவே பாசங்களின் நீங்கித் தூயவனாய் உள்ளவன்.

3.ஆன்மா சிற்றுணர்வினது. ஆகையால், அதன் முன் பாசங்கள் அரும்பெரும் பொருளாய்த் தோன்றும், சிவன் முன் அவை பொருளாகத் தோன்றா. ஆகவே,ஆன்மாக்கள் உணர்தலால் வரும் பயன் அவற்றிற் கேயன்றி இறைவனுக்கோ ஐம்பொறிகளுக்கோ ஆவது இல்லை.

ஆன்ம பிரகாசம் - உள்ளொளி.

ஆன்ம போதம் - உயிருணர்வு.

ஆன்ம ருபம் - ஆன்ம வடிவம் பத்துச் செயல்களுள் ஒன்று. ஆணவ இருள் நீங்கி ஞானம் காணல்

ஆன்மா - பொருள் : உயிர், சதசத்து, உள்ளொளி. தெரிபொருள் எனப் பரிபாடல் செப்பும்.

வகை: சீவான்மா, பரமான்மா என இருவகை

நிலை:கேவலநிலை, சகலநிலை, சுத்தநிலை என மூன்று பா. ஆன்ம நிலை

வாழுமிடம் : மாயாள்தன் வயிற்றில் அகக்கருவி உட்கருவியால் துடக்குண்டு வாழ்வது.

46