பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆன்மாச் சிரய தோடம்

இக்கிரமம்


தோற்றம் : வரும் குணவடி வாய் மூலப்பிரகிருதிக் கலை யில் தோன்றுவது.

வடிவம் : அருவாயும் உருவாயுமுள்ளது.

இயல்புகள்: 1.அறிவுகள் அறிந்திட ஐந்தையும் அறிவது 2. அறிவாற்றல், விழைவாற்றலை, செயலாற்றல் ஆகிய மூன்றையுங் கொண்டது 3. ஐந்து அவத்தைக்கு உட்படுவது 4. வேண்டுவது பேரின்பமே 5. ஆன்மா ஒன்றே 6. தன்மையால் சத்தாகவும் சிதசித்தாகவும் நிற்பது.

தொழில்கள் : 1. உன்னுதல் 2. ஒடுங்கல் 3. ஒடல் 4.இருத்தல் 5. கிடத்தல் 6 நிற்றல்,

மலம் : ஆன்மாவிற்கு ஆணவம் சகசமலம் ஆகும். மாயையும் கன்மமும் ஆகந்துகமலம் ஆகும்.

கொள்கை : ஆன்மாபற்றி அமைந்துள்ள கொள்கைகள் 9. பா.ஆன்மக் கொள்கைகள், ஆன்மக்கொள்கை மறுப்பு.

ஆன்மாச் சிரய தோடம் - தன்னைப் பற்றுதல் என்னும் குற்றம்.

ஆன்மா புருடனாதல் - தொழில், அறிவு, விழைவு ஆகிய மூன்றும் வைச்சபோது, இச்சா ஞானக்கிரியை முன் மருவி, ஆன்மா நிச்சயம் புருடனாகிப் பொதுமையில் நிற்கும் என்பது சிவசித்தியார் உரைப்பது.

ஆன்மார்த்த பூசை- தன் பொருட்டுத்தானே செய்யும் பூசை'

ஆன்மாவின் அணுத்தன்மை - உயிர் எங்கும் பரவியுள்ளது என்று சைவ சித்தாந்தம் கருதுகிறது. ஆன்மா அணுவளவுள்ளது என்பது சீகண்டர் துணிவு. இதில் இவரும் இராமனுசரும் ஒரே கொள்கை உடையவர்களே.

ஆன்மாவின் சார்ந்த வண்ணம்-தன்மையால் சதசத்தாகவும் சிதசத்தாகவும் நிற்றலே ஆன்மாவின் சார்ந்த வண்ணம் ஆகும். இது உண்மை இயல்பு என்னும் சொரூப இலக்கணம் ஆகும்.

ஆன்மாவுடன் சிவம் அல்லது பதியின் தொடர்பு - உடனாதல், ஒன்றாதல், வேறாதல் ஆகிய மூன்றும்.

ஆன்றோர் - சான்றோர்.

ஆனா அறிவு - இறையறிவு, பேரறிவு.

ஆனாதஇராமர் -நீங்கா இராமர் மூவர். இராமன், பலராமன், பரசுராமன்

ஆனாமை-நீங்கானம். ஆனாய நாயனார் - யாதவர், திருமங்கலம். - மழநாடு இலிங்க வழிபாடு (63)

ஆனை - கணபதி

ஆனைந்து - பஞ்ச கவ்வியம், பசும்பால், வெண்ணெய், தயிர், கோமயம் (சாணம்), கோமூத்திரம் ஆகிய ஐந்து வழிபாட்டு முறைகளில் ஒன்று.

- பிரமன், மன்மதன்.

இகல் - போர், பகை, முரண் எ-டு பரமனார் இகலிடாமல் (சிசி பப 296).

இகலல் - பகைத்தல்.

இக்கிரமம் - இவ்வரிசை

47