பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல்பு ஏது

இயைபுப்படுத்தல்


பொது இயல்பே விளங்கும். பட்டறிவால் அறியும்பொழுது, உண்மை இயல்பு விளங்கும். ஆகவே, பொருள்களுக்குப் பொது இயல்பு, உண்மை இயல்பு (சிறப்பியல்பு) என இரு இயல்புகள் உண்டு முன்னது செயற்கையாக உண்டாவது. எ-டு நீரின் வெப்பம். பின்னது இயற்கையாக இருப்பது, எ-டு நீரின் தட்பம்.

இயல்பு ஏது- மூன்று ஏதுக்களில் ஒன்று. சொல்லின் இயல்பான ஆற்றலால் பொருளை உணர்வது. எ-டு மா, மரம், விலங்கு

இயல்பு வழக்கு - இலக்கண முடையது, இலக்கணப்போலி, மரூஉ மொழி.

இயற்கை உணர்வு - இயற்கை அறிவு, தானாக அறியும் அறிவு, அதாவது, இறையறிவு.

இயற்பகை நாயனார் - வணிகர், பூம்புகார், சிவனடியார் விரும்பியதை இல்லை என்று கூறாது வழங்கியவர். சங்கம வழிபாடு (63) .

இயற்பட இற்பட - இயல்புகெட

இயற்பெயர் -இயல்பாக உள்ள பெயர். எ-டுநெடுஞ்செழியன்.

இயற்றல் - ஆள்வினை.

இயற்று - செய்

இயாகம் - வேள்வி, எ-டு பசுப் படுத்து இயாகம் பண்ண (சிசிபப 193)

இயைந்து - கூடி

இயைபின்மை நீக்குதல் - தொடர்பின்மையை விலக்குதல்,

இயைபுப்படுத்தல்- தொடர்புப்படுத்தல். ஒவ்வாத பலவற்றை இயைபுப் படுத்தல் இயைபுப் புறச்செய்வது சைவ சித்தாந்தம். இதற்குரிய விளக் கம்பின்வருமாறு:

1.சாங்கியர் போலச் சற்காரிய வாதத்தை ஏற்கிறது. ஆனால், அவர்கள் இறையிலிக் கொள்கையை விடுகிறது. 2.நையாயிகர்களைப்போல இறைவன் உண்டு எனக்கொள்கிறது ஆனால், அவர்களுடைய அசற்காரிய வாதத்தை விடுகிறது. 3. நையாயிகர்களைப் போல அன்யதாக்கியாதியை ஏற் கிறது.ஆனால்,அவர்களுடைய பரதப் பிராமானியக் கொள்கையை விடுகிறது. 4. மீமாம்சர்களைப்போலஸ்வதப் பிராமாண்யத்தை ஏற்கிறது. ஆனால், அவர்களின் இறை யிலிக்கொள்கையை விடுகிறது. 5. அத்துவைதிகளைப் போலச் சீவன் முத்தியை ஏற்கிறது. ஆனால், அவர்களின் நிர்க் குணப்பிரம-மாயாவாதத்தை விடுகிறது.

6. விசிட்டாத்துவைதிகளைப் போல், இறைவனை எண்ணில் பலகுணம் உடையவனாகக் கொள்கிறது. ஆனால், அவர் களின் சீவமுத்தி மறுப்பை விடுகிறது. - இவ்வாறு எல்லாக்கருத்துகளையும் கொள்கைகளையும் ஏதோ எவ்வாறு என்று குவித் துக்கலவையாக்காமல், சைவ சித்தாந்தம் தன்னுடைய அடிப் படைக்கோட்பாட்டிற்கேற்ப, அவற்றை இயைபுப்படுத்தி, வேண்டியவற்றை எடுத்துக் கொள்வது அதன் உலகளாவிய தன்மையையே காட்டுகிறது.

50