பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராசி

இருமலம்


இராசி - சோதிடத்தில் குறிக்கப் பெறும் 12 இராசிகள். அவையாவன : மேடம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுர், மகரம், கும்பம், மீனம்,

இராம தேவர் - 18 சித்தரில் ஒருவர்.

இராமர் முவர் - இராமன், பலராமன், பரசுராமன். எ-டு ஆனாத இராமர். மூவர் (சிசிபப266),

இராமானுசர்-வைணவ ஆசாரியர். பிரம சூத்திரத்திற்கு இவர் செய்த பாடியத்தின்படி அமைந்ததே பாஞ்சரத்திரம். இப்பாடியக் கொள்கை விசிட் டாத்துவிதம். இக்கொள்கைச் சுருக்கமாவது உலகம் முழுதும் திருமால்மயம் உண்மையை உணரத் திருமாலைச் சரண் அடைவதே ஞானமாகும். அவ்வாறு அவன் பரமபதத்தில் வாழ்தலே முத்தி.

இராவணன்- அரக்கர் தலைவன், இலங்கை அரசன், இராம ரோடு போர் தொடுத்து மடிந்தவன்.

இராவணாதி-இராவணன் ஆதி. இராவணன் போல் நடித்தல்

இரிக்கல் - நீங்குதல், எ-டு இரு ளெலாம் இரிக்கல் ஆகும்.

இரித்து - களைத்து.

இருஇயல்-வழக்கு இரு இயல்பு. உள் வழக்கு, இல்வழக்கு. இயல்-இயல்பு. ஒ. மரு இயல், உருஇயல், அருஇயல்.

இருக்கு-இருக்குவேதம் நான்கு வேதங்களில் ஒன்று.தொன்மை யானது.

இருங்கிரி-மேருமலை, இதனைத் திருமால் தன் முதுகில் தாங் குதல் (சிசி பப 267)

இருட்கண் - பாச ஞானம் மலத் தில் உண்டாகும் அறியாமை. இருட்கண்ணே பாசத்தாற்கு ஈசன் (சிபோ பா 70).

இருண்மலம் - ஆணவ மலம்.

இருத்து - நிறுத்து.

இருதிறன் - உள்பொருளாகிய சத்தும் இல்பொருளாகிய அசத்தும். எ-டு இருதிறன் அல்லது சிவசத் தாமென (சிபோ நூபா 6).

இருதிறன் அறிவு-நல்லதையும் தீயதையும் அறியும் அறிவு. இதை மூன்று வகையாகப் பிரித்துப் பொருள் கொள்ளலாம். 1.இருதிறனையும் அறியும் அறிவு 2.இரு திறனிலும் அறியும் அறிவு. 3.இருதிறனாலும் அறியும் அறிவு.

இருநான்கு-4+4=8 அட்டாங்க யோகம்: இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி.

இருநிதி - சங்கநிதி, பதுமநிதி.

இருபத்து நான்கு தத்துவம் - பூதம் 5, ஐம்பொறி 5, தொழிற் பொறி 5, ஐம்புலன் 5 அகக் கருவி 4.

இருபா இருபது-14 மெய்கண்ட நூல்களில் ஒன்று. 20 பாடல்களைக் கொண்டு, சைவ சித்தாந்த நுணுக்கங்களை நயத்துடன் விரித்துரைப்பது, ஆசிரியர் அருணந்தி சிவாசாரியார்.

இருபொழுது - இரவும் பகலும் .

இருமலம்-மும்மலங்களில் எவையேனும் இரண்டு.

52