பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலகி

இலாடத்தில் நிகழும் அவத்தை


இதில் யாழ்ப்பான நாயனார் ஏறி யாழ் இசைத்தார். இவர் போன்று ஊழி தோறும் அறிவு முத்திரையால் இசை ஆராய்ந்தோர் ஏறும் தகுதியுள்ள பலகை இது. (நெவிது 104) ஒ. வல்லுப்பலகை.

இலகி - எளிதாக, விளங்க எ-டு இலகி நடக்கும் எழில் ஆணையான் (நெவிது 75).

இலகுதை - நொய்மனம் எ-டு அலகில் குணம் பிரகாசம் லகுதை வியாபிருதி (சிபி42)

இலச்சினை-முத்திரை.

இலயம் -1. இரண்டறக்கலத்தல் 2. ஞானம் மட்டுமே திருமேனி யாகவுள்ள கடவுள் 3 ஒடுக்கல்.

இலயதத்துவம் - சிவதத்துவம், சத்தித் தத்துவம் என இருவகை. இலய முத்தி - முத்திகளில் ஒரு வகை இலய சிவத்தை அடைந்து மலமாய கன்மங்களிலிருந்து விடுபடுதல். சகல வகை ஆன்மாக்களுக்கும், தற்போதம் அடங்கிய இடத்தில் இலய சிவம் ஏகனாய்ப்பிரகாசிக்கும். வேறுபெயர் நின்மலதுரியம். இது சிவஞான போதத்தில் பின்வருமாறு கூறப்படுகிறது. “ஏக னாகி இறைபணி நிற்க” (நூற்பா 10).

இலயாவத்தை- உலகை ஒடுக்கும் நிலை.

இலயித்தது- ஒடுங்தியது. எ-டு இலயித்த தன்னில் இலயத்தது ஆம் (சிபோ பா 2).

இலவணம் - உப்பு.

இலளிதம்- ஆகமம்28இல் 1.

இல் - இல்லம், இல்லை.

இல்லம் உடையார் - உயிர்கள்.

இல்லா அரு - புலப்படுதல் இல்லாத அரு.

இல்பொருள்-இல்லாதபொருள். எ-டு முயற்கோடு.

இல்லறம்-அறப்பகுதி இரண்டில் ஒன்று. எ-டு அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை (குறள் 50).

இல்லென்று - அடங்கி நிற்கச்செய்து.

இல்லை - அமையாமை.

இலாடம் - புருவநடு.

இலாடத்தில் நிகழும் அவத்தை-இது ஐந்து அவத்தை இலாடம் சாக்கிரத்தானம். ஆகவே, இதில் நிகழும் ஐந்து அவத்தைகளாவன.

1. சாக்கிரம் சாக்கிரம் 2 சாக்கிர சொப்பனம் 3. சாக்கிர கழுத்தி 4. சாக்கிரதுரியம் 5. சாக்கிர துரியாதீதம். இவை முறையே அவ்வத் தத்துவங்கள் ஐந்து நான்கு மூன்று.இரண்டு.ஒன்று என்னும் எண்ணிக்கையில் நின்று தொழிற்படுவதால் உண்டாகுபவை.

வேறுபெயர் சகலசாக்கிரம், சகல சொப்பனம், சகல சுழுத்தி, சகல துரியம், சகல துரியாதீதம்.

சகல சாக்கிரத்தில் யாதொரு கருவியும் குறையாது எல்லாக் கருவிகளும் நன்கு செயற்படும். அதனால் ஆன்மா இந்நிலை யில் உலகத்தை நன்றாக அறிந்து நுகரும். பிரேரகக் (செலுத்தும்) கருவிகள் என்று குறிப்பிடப்பட்ட சிவதத்துவம் ஐந்தும் குறைவின்றியே நிற்கும். கேவல சாக்கிரத்தில் தத்துவ தாத்துவிகங்களுள் 50 கருவிகள். செயற்படா. ஆகவே, ஆன்மா விழிப்புற்றுக் கண்டும்

54