பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறைபணி

இனாது நிலை


தானேயாகிய அந்நெறி (சிபோநூபா 10)

இறைபணி - திருவருட்பணி. இறைவனுக்கு நான்கு பாதங்களால் தொண்டு செய்தல். சமயக்குரவர் நால்வரும் இத னைச்செய்தவர்கள்.நாயன்மார்களும் இதைச் செய்தவர்களே.

இறைபணி மன்றம் - மன்றம் அமைத்து இறைவனுக்குப் பணி செய்தல், எ-டு கோயிலைப் புதுப்பித்தல், குட முழுக்கு செய்தல்

இறைபிரமேயம்-வினை முதல் ஆகிய பிரமம்.

இறைமொழி - இறைவன் அருளிய ஆகமம்.

இறைவழிபாடு-இறைவனைத் தொழுதல், சைவத்தின் தலையாய பகுதி. பா. வழிபாடு

இறைவன் இலக்கணம் - இறைவன் இயல்பு, சித்தா தலும் சத்தாதலும் தவிர, உடனாதல், ஒன்றாதல், வேறாதல் ஆகிய மூன்றும். எங்கும் எதிலும் நிறைந்து நிற்றல், எ-டு அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து (திஅப1)

இறைவன் குண்ங்கள் - பா.எண்குணம்.

இறைவன் தொழில்கள் - இவை மூன்றும் இரண்டுமாக ஐந்தாகும். மூன்று : படைத்தல், காத்தல், அழித்தல் இரண்டு : மறைத்தல், அருளல்.

இறைவன் நிலை - திருவருள் நிலை.சாரூபம், சாமீபம், சாலோகம், சாயுச்சியம்

இறைவன் பெயர்கள் - இவை எண்ணில், ஏகன், நிர்மலன், நிர்க்குணன், அநாதி, சச்சிதானந்தம், நித்தியானந்தன், சுத்தன், நித்தன், சர்வாதிகாரி அகண்டி தன் முதலியவை.

இறைவன் மாட்சி - வெளியில் வெளியன், ஒளியில் ஒளியன், அளியில் அளியன், அளவில் அளவன்.

இறைவன்வடிவங்கள்-இறைவன் உருவங்கள் 9: சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகே சுவரன், உருத்திரன், மால், அயன். இவை ஒன்றில் ஒன்று தோன்றுபவை.

இன்பஆர்கலி- சிற்றின்பக் கடல்.

இன்ப சுகவடிவு - இறைவன். எ-டு சூதான இன்பச் சுக வடிவை (திப 100-1)

இன்பம்-துய்ப்பதற்குரிய மகிழ்ச்சி பேரின்பமே நிலையான மகிழ்ச்சி. ஒ. துன்பம்.

இன்பு - இன்பம் ஒ. துன்பு.

இன்மை - விளங்காமை.

இன்றியமையாமை - இல்லாமல்முடியாமை

இன்று - 1 சூனியம், அசத்து, அதாவது இன்மை 2, இற்றைக்கு.

இன்னமுதம் - இனிய சோறு. எ-டு வேந்தனார்க்கு இன்ன முதம் ஆயிற்றே (திப 53)

இனமலர்-மலர்த்தொகுதி, எ-டு இனமலர் மருவிய அறுபதம் (தேவா 1227)

இனமலி சோத்திராதி-மேம்பட்ட இனமாகிய அறிவுப் பொறிகள்.

இனாது நிலை - இன்மையைப் பயக்கும் நிலை.