பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இனைய - வருந்துவதற்குரிய, அஞ்சுவதற்குரிய, இத்தன்மையுள்ள, எ-டு: இனைய பல பிறவிகளில் இறந்து பிறந்து அருளால் (சிபி 48).

ஈ-பார்வதி, சரசுவதி, இலக்குமி.
ஈசத்துவம் - ஈச தத்துவம் எண் வகைச் சித்திகளில் ஒன்று. எல்லாவற்றையும் தன் கட்டளைக்குள் கட்டுப்படுத்தல்.
ஈசன் - இறைவன்.
ஈசன் கழல்-இறைவன் திருவடி
ஈசர் சதாசிவமும் கலாரூபமும் சுத்தவித்தைக்குமேல் எண்ணப்பட்ட ஈசுரம், சாதாக்கியம் என்னும் இரு தத்துவங்களும் 64 என்னும் எண்ணிக்கையிலுள்ள கேசரமும் ஆகும்.
ஈச்சுரம் - பா. ஈசத்துவம்
ஈசுவர அவிகாரவாத சைவம் - முதல்வன் உதவியை உயிர் விரும்புமாயின், முதல்வனும் பிறிதொன்றின் உதவியை விரும்புவான் என்னும் கொள்கை. இக்கொள்கை உள்ளவர் ஈசுவர அவிகாரவாத சைவர் எனப்படுவர்.
ஈசுவரன் - இறைவன், ஈசனின் ஐந்து முகங்களில் ஒன்று.
ஈட்டம் - ஈட்டுதல். இன்ப நாட்டம். ஈட்டுதல் - கூட்டுதல், சம்பாதித்தல். ஈண்டிய - எல்லா நூல்களின் பொருளும் திரண்டமைந்த. எ-டு ஈண்டிய பெரும்பெயர் (மகாவாக்கியம்) (சிபோ பாயிரம்)
ஈர்வாள் - அரம். ஈர் ஐந்து மாத்திரை- பத்து மாத்திரை. அறிவுப் பொறி புலன் 5, தொழில் பொறி புலன் 5
ஈரா - ஈரமிலா, பவமுள்ள.
ஈரேழ் நால் ஒன்று - 2X7+4= 18. சாக்கிரத்தில் 14 கருவி களும் சொப்பணத்தில் 4 கருவிகளும், சோத்திராதி 5, சத்தாதி 5, அகக்கருவி 4, ஆக 14, சொப்பனத்தில் 4. மொத்தம் 18 (சிசி பப230)
ஈரைந்துபிறப்பு-பத்துப் பிறப்பு. எ-டு ஈரைந்து பிறப்பில் வீழ்ந்து (சிசி பப301)
ஈறு - இறுதி, சங்காரக் கடவுள். எ-டு ஈறாகி அங்கே முதலொன் றில் ஈங்கு இரண்டாய் (திப 86)
ஈறாதல்-சங்காரப்படுதல்,அழிதல்
ஈனம்- குறை. எ-டு ஈனம் இல் சதாசிவன் பேர் (சிசி சுப 85).

உகவும் - நீங்கவும்.
உகிர் - நகம். உகுத்த - உதிர்ந்த உச்சரித்தல் - உச்சாரணம் செய்தல், உச்சரிப்பு அளவு
உடங்கு - ஒருங்கு, எ-டு உடங்கு இயைந்து.
உடங்கு இயைதல்- ஒன்றாதல்.
உடந்தை - உறுதுணை, எ-டு உடந்தை உடனே நின்று உந்தீபற (திஉ15)

உடம்பு, உடல்-பருவுடல், நுண்ணுடல் என இருவகை முன் னது தூலம் என்றும் பின்னது சூக்குமம் என்றும் கூறப்படும். பருவுடல் ஐம்பொறிகளாக அனைவராலும் காணப்படு

58