பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடம்பு அமைப்பு

உட்கருவி செயற்படுதல்


வது. நுண்ணுடம்பு மனம் முத்லிய அகக்கருவிகளைக் கொண்டு

எவர் கண்ணுக்கும் புலப்படாது இருப்பது.காரண உடல் என்பதும் ஒன்று.

உடம்பு அமைப்பு - துவக்கு (தோல்), உதிரம் (குருதி), இறைச்சி, மேதை (கொழுப்பு), என்புச்சோறு,சுக்கிலம்(வெண்ணியம்), இந்திரியம் (பொறி) ஆகியவற்றால் ஆனது உடம்பு.

உடம்பும் உலகமும் - சொர்க்கலோகம் புகப் பூத உடலும் நரகலோகம் புக யாதனா உடலும் பூவுலகை அடையப் பருவுடலும் தேவை.

உடம்பொடு புணர்தல் - சிறப்புடைய ஒரு பொருளைத் தனியாகக் கூறாமல், மற்றொரு பொருளுக்குத் தரும் அடைமொழியில் குறிப்பால் தோன்ற வைத்துக் கூறுவர். இஃது ஒர் உத்தி அல்லது நுணுக்கம். எ-டு ”அவன் அவள் அது”என்பது ஒருவன் ஒருத்தி எனக் கூறப்பெறுவது.

உடலம் - உடம்பு.

உடல் ஊழ்-உடம்பின் நுகர்ச்சி.

உடல்வினை - ஊழ்வினை.

உடற்குறை - குறள், செவிடு, மூங்கை, கூன், குருடு, மருள், உறுப்பிலாப்பிண்டம் என ஏழு

உடற்றிரிவு - உடல் திரிவு.உடல் வேறுபடுதல்.

உடன்பாடு - உடன்படுதல். கொள்கை உடன்பாடு. நாத்திகத் தத்துவப் பிரிவுகளுள் சமணத் திற்கும் ஆத்திகத் தரிசனங் களுள் அத்வைதம் நீங்கலாகப் பிறவற்றிற்கும் உயிர்கள் பல என்பது கொள்கை உடன்பாடு.

உடனாதல்-இறைவன் இயல்புகளுள் ஒன்று. செயல்தன்மை யால் இறைவன் உயிர்களோடு உடனிருத்தல். பா. ஒன்றாதல், வேறாதல், அதாவது, அவையும் தானுமாய் நிற்றல்.

உடனிகழ்ச்சி - ஒன்று நிகழுங்காலத்தில் பிறிதொன்று உட னாக நிகழ்தல். இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்திநி பாதம் ஆகிய மூன்றும் உட னிகழ்ச்சிகள் ஆகும். முத்திக்குத் தேவைப்படுபவை.

உட்கருவி - அகக்கருவி. அந்தக்கரணம். மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கு. சிறப்பாக, மனாதி, ஒயாத காயத்தை உண்டு பண்ணுவது.

உட்கருவி செயற்படுதல்-மனம் வழிவழியாக வருவனவற்றைப் பற்றுவது இது பற்றப் பட்ட பொருள் இன்னதாக லாம் என்னும் முதல் உணர்வோ சங்கற்பம், நிர் விகற்பக் காட்சி இதுவோ அதுவோ என்னும் ஐய உணர்வோ (விகற்பம்) எழும் நிலை இங் குண்டு காட்சிக்குப் பட்டதை இன்னதுதான் எனத்துணிய வேண்டும் என்னும் எழுச்சியை உண்டு பண்ணுவது.

2.அகங்காரம் - யான் என்னும் முனைப்பு .

3. புத்தி அறிவு. நுகர்வில் பட்டதை இன்னதெனத் துணிவது இது. இது மனச் சாட்சியாகும்.

4.சித்தம் - இது மனம், அகங்காரம், புத்தி ஆகியவற்றின் தொழிற்பாட்டால் கிடைத்தவற்றை மறவாது வைத்துக் கொள்வது இது.

59