பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 உபதேசம்

உமாபதி சிவம்



உபதேசம் - அருளுரை, அறிவுரை.

உபதேச மொழி - உபதேச வாக்கியம்.

உபதேசப் பஃறொடை - 14 பண்டார சாத்திரங்களில் ஒன்று. ஆசிரியர் தெட்சிணா மூர்த்தி தேசிகர்.

உபதேச வெண்பா - 14 பண்டார சாத்திரங்களில் ஒன்று. ஆசிரியர் அம்பலவாண தேசிகர்

உபதேசியாய் - அறிவிக்க, அறியுந்தன்மை உடையதாய்

உபநயனம்-1,மூக்குக்கண்ணாடி 2. பூணுாற்சடங்கு பா. தர்ப்பணம்

உபநிடதம் - சைவத்தைக் குறிப்பிடும் வேதத்தின் ஞான காண்டம்.

உபமன்யு தேவர்- சைவ முனிவர். கண்ணனுக்குச் சிவதீக்கை அளித்தவர். பக்தவிலாஸ் என்னும் வடமொழி நூலின் ஆசிரியர். இது 63 நாயன்மார்களின் வரலாறு கூறுவது வியாக்கிரபாத முனிவரின் மகன். வாசுதேவரைச் சிவனோடு சேர்க்க இறைஞ்சியவர் (சிசி பப 287).

உபயம்- கொடையளிப்பு, இக்கோயிலுக்கு இக்கதவு அல்லி உபயம்.

உபராகம் - கோள் மறைவு.

உபலம் - பளிங்கு எ-டு. ஒளிதரும் உபலம்.

உபலப்தி - உள்ளதென்று உணரும் உணர்வு.

உபவேதம்-இது 4 ஆயுர்வேதம் தனுர்வேதம், காந்தருவவேதம், அர்த்த வேதம், எ-டு மூன்று உபவேதம் தானும் (சி.சி.ப.ப 185) பாவேதம்.


உப்பு- ஆன்மா

உபாதாயம் -துணைப்பொருள். உருவப்பொருள் வேறு. உபாதாயப்பொருள் வேறு எ-டு உருவம் பூஉபா தாய சுத்தாட்டக உருவம் (சிசிபப 111)

உபாதானம்- விந்து, மோகினி, மான் ஆகிய மூன்றும் உலகினுக்கு உபாதானங்கள்.

உபாதி - பொருளின் குணமாகாது. (இயல்பாகாது) அதற்குக் குற்றமாய் அதனைப் பற்றி நிற்கின்ற அயற்பொருள்.

உபாங்கம்-1:வேதாகமங்களுக்கு உறுப்பாய் உள்ள சாத்திரம் உரபொறிவழி,

உபாயம்-கருவி. சாமம், பேதம், தானம், தண்டம் என நான்கு.

உபாயச் சிவ புண்ணியம் - உலகப் பொருளை நீக்கிச் செய்யும் புண்ணியம்.

உபாய நிட்டை - எளிதில் சித்தியடையும் வழியைப் பற்றுதல் பா. ஞான நிட்டை

உபாயநிட்டை வெண்பா 14 பண் டார சாத்திரங்களில் ஒன்று. ஆசிரியர் அம்பலவாண தேசிகர்.

உம்பர் - தேவர்.

உம்பர் பிரான் - இந்திரன்.

உமாபதி சிவம், சிவாச்சாரியார் - அந்தணர். கொற்றவன்குடி சிதம்பரம், வேறுபெயர் கொற்றங்குடி முதலியார், அடிகள், மறை ஞான சம்பந்தர்.

செய்த அற்புதங்கள் : 1. பெற்றான் சாம்பானுக்கும் முள்ளிச் செடிக்கும் முத்தியளித்தல். 2.சிதம்பரத்தில் ஏறாது நின்ற கொடியைக் கொடிக் கவிபாடி ஏறச்செய்தல் 3 கோயிற்புராணத்தை அரங்கேற்றல். சந்தான

62