பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர்களின் கடமை

உருத்திரபசுபதி நாயனார்



உயிர்களின் கடமை - பெத்தம் (தளை), முத்தி ஆகிய இரண்டிலும் எப்பொழுதும் உயிர்களுடன் நின்று உதவுபவன் இறைவன். அவன் திருவருள் ஒருநாளும் மறவாது நினைந்து நினைந்து அவனிடம் ஆரா அன்பு காட்டுவதே உயிர்களின் தலையாய கடமையாகும்.

உயிர்க்காட்சி - திருவருனைக் கண்ட உயிர் தன் செயலற்று நிற்றல்,

உயிர்த்துய்மை - திருவருனைக்கண்ட நிலையில் உயிர் உலகியல் பொருள்கள் ஒவ்வொன்றிலும் அழுந்தியும் அறிந்தும் நின்ற நிலை நீங்கித் திருவருளால் சிவத்தைப் பெற்று, அதனுள் அடங்கித் தான் வெளிப்படாது இருக்கும் நிலை.

உயிர்த்தோற்றம் - கருப்பை,முட்டை, நிலம், வியர்வை என நான்கு.

உயிர் வகை - விஞ்ஞானகலர், பிரனயாகலர், சகலர் என மூன்று வகை. பா.அணுமூன்று

உயிர் வடிவு - உயிர் ஆணவ மலத்தினின்றும் நீங்கப்பெற்றுத் திருவருளைத் தன் அறிவின்கண் காண்பதாகும்.

உரகம் - பாம்பு.

உரமனார்- சிவன், எ-டு உரமனார் அழல் உரூபம் (சிசிபப 296)

உரா- அலைந்து ஓடுதல், எ-டு உரர்த்துனைத்தேர்த்து (சிபோ நூ பா9)

உராதுனைத்தேர் - கானலாகிய பேய்த்தேர், பாசம் பேய்த்தேரின் இயல்புடையது. கண்ணுக்குத்தொலைவில் நீர்நிலையாய் உள்ளதுபோலத்தோன்றி,நெருங்கியதும் இல்லா தொழிவது பேய்த்தேரின் இயல்பு. அது போல், வாழ்வார்க்கு உறுதிப்பொருள் போலத் தோன்றிப் பயன் நோக்குமிடத்து, உயிர் வாழ்க்கைக்குக் கருவியும் இடமுமாய்க் கழிந்து போவதால் உலகு, உடல் ஆகிய பாசமானது பேய்த்தேர் எனக் கூறப்பட்டது. உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் (சிபோ நூபா 9)

உராவுதல் - உலவுதல்

உரிமை - தொடர்பு.

உரியர்வகை -1.நான்கிற்குரியவர்: சரியை, கிரியை, யோகம், ஞானம் 2. மூன்றிற்குரியவர்: சரியை, கிரியை, யோகம் 3. இரண்டிற்குரியவர் : சரியை, கிரியை 4. ஒன்றிற்குரியவர் : சரியை

உரு - அசத்து, விக்ரகம், உருவம்.

உரு இயல் - உருவம், பூதமொடு இது உபாதான வடிவமாகும். ஒ.அரு இயல், மரு இயல், இரு இயல்.

உருஉடம்பு - பருவுடல்,

உருஉடையான் - உருவமுள்ள இறைவன்.

உருஉயிர் - சகலர். பா. விஞ்ஞானகலர்.

உருக்கு-நெகிழச்செய். ஒ. உறுக்கு

உருகு - அன்பு, ஒ. திருகு,

உருத்திரன் - சங்காரகர் ஐவரில் ஒருவர்.

உருத்திரபசுபதிநாயனார்-மறையவர். திருத்தலையூர் சோழ நாடு, தாமரைமடுவில் கழுத்தளவு நீரில் நின்று, திருவைந்

64