பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக ஆனந்தம்

உலோகம் ஏழு



ஆக்காது ஆக்கி நோக்காது நோக்கி என்று கூறியமையால், அவ்வாறே நொடித்து என்பதற்குமுன் நொடியாத என்று இல்லாவிட்டாலும், உரையிற் கோடல் என்னும் உத்தியால் வருவிக்கப்பட்டது.

"நோக்காது நோக்கி (நொடியாது) நொடித்துஅன்றேகாலத்தில்" (சிபோ பா4)

உலக ஆனந்தம்-சிற்றின்பம்

உலகம் - 1. உயிர்த்தொகுதி 2. பொருள் தொகுதி. உலகம் அவையம் பருப்புடையது.

உலகம் -1. பிரபஞ்சம் 2 புவனம். இது 224 பொதுவாகத் தத்துவ வழக்கில் உலகம் நான்காகும். அவை பின்வருமாறு:

1. சொல்லுலகம் (சத்தப்பிரபஞ்சம், இதில் மந்திரம் (11), பதம் (81), வன்னம் (51) என மூன்று அடங்கும்.

2.பொருள் உலகம் (அர்த்தப் பிரபஞ்சம்) இதில் புவனம் (224), தத்துவம் (36) என இரண்டு அடங்கும்.

3.பருப்பொருள் உலகம் (அசேதனப் பிரபஞ்சம்).

4.அறிவுடை உலகம் - (சேதனப் பிரபஞ்சம்) புராண வழக்குப்படி பூலோகம், பரலோகம் (சொர்க்கம்), கீழ்மேல் உலகம் என உலகம் நான்கு வகை. இவ்வகையில் விண் ஏழு, பார் ஏழு ஆகியவையும் அடங்கும்.

உலகம்,கீழ் - அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாளம்,

உலகம், மேல்-பூலோகம், புவர் உலோகம், சுவர்லோகம்,சனலோகம், தபோலோகம், மகர லோதும், சத்திய லோகம்

உலகவினை-தண்ணிர்ப்பந்தல் முதலியவை அமைத்தல். நிவர்த்தி கலையில் அடங்கும். அசுத்தப் போகத்தைத் தரும்.

உலகாயதர் - நாத்திகர். கடவுள் இல்லை என்னும் கொள்கையினர்.

உலகாயதம் - நாத்திக மதம். கடவுள் இல்லை என்னும் கொள்கையுள்ள சமயம் இதன் மூலவர் பிருகஸ்பதி

உலகாயவாதி- உடம்பு வேறாய் ஒன்றும் இல்லை என்னும் கொள்கையினர்.மகளிர் வயப்பட்டு நின்று துய்க்கும் இன்பமே வீடுபேறு என்பர்.

உலகியல்வழக்குரை-உலகியல் வாதம்.

உலகு - உயர்ந்தோர்.

உலண்டு.- கோற்புழு,

உலவம் - காற்று எ-டு உலவத் துக்கு மருவும் அனலோடு நீர் (சிசிப ப 11)

உலவாக்கிழி-குறையாப் பொன்முடிப்பு. திருஞானசம்பந்தர் சிவனிடமிருந்து பெறுதல். பா. திருஞான சம்பந்தர் செய்த அற்புதங்கள்.

உறுதை -சிலந்தி

உலோக தருமிணி - போக காமிகட்குச்செய்யப்படும் சபீச தீக்கைவகைபா.சிவதருமிணி

உலோகம் ஐந்து - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்.

உலோகம் ஏழு - செம்பொன், வெண்பொன், கரும்பொன், செம்பு, ஈயம், வெண்கலம், தரா.

66