பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எண், எண்ண்ம்

எரிசேர்ந்த வித்து



பட்டு விளங்காத தன்மையும் அது முலைப்பால் கண்ணீர் வடிவாகத் தோன்றுவதையும் எடுத்துக்காட்டப்பட்டதால் எடுத்துக்காட்டு உவமையணி யாகும்.

எண்,எண்ணம்-மானதக்காட்சி.

எண்எண் கலை - 8 X 8 = 64 ஆயகலைகள்.

எண்ணி- ஆராய்ந்து.

எண்ணிய ஈசர் சதாசிவம்- தத்துவங்களுக்கு மேலாகவுள்ள ஈசுரம், சதாசிவம் என்னும் இரு தத்துவங்கள்.

எண்குணம்-எட்டுக்குணங்கள். இவை நல்லவை தீயவை என இருவகை.

எண்குணம் தீயவை - இவை உயிரின் எட்டுக் குற்றங்கள். அநாதியே மலத்தைப் பற்றுபவை : 1. சுதந்திரமில்லாமை 2. தூய உடம்பில்லாமை 3, இயற்கை உணர்வில்லாமை 4. பேரருள் இல்லாமை 5.முடிவிலாற்றல் இல்லாமை 6. முற்றும் உணர்தல் இல்லாமை 7. வரம்பில் இன்பமில்லாமை 8. இயல்பாகவே பாசம் நீங்காமை

எண்குணம் நல்லவை - இவை இறைவனின் அருட்குணங்கள்: 1. தன்வயனாதல் 2. துய உடம்பினனாதல் 3.இயற்கை உணர்வினனாதல் 4.முற்று முணர்தல் 5. இயல்பாகவே பாசங்களை நீக்குதல் 6 பேரருள் உடைமை 7. முடிவிலா ஆற்றல் உடைமை 8. வரம்பில் இன்பமுடைமை (பேரின்பம்)

எண்ணான் - நுகரான்.

எண்ணியறிதல் - ஆராய்தல்.

எண்ணுறுப்பு வணக்கம் - அட்டாங்க நமக்காரம். எட்டுறுப்புகளைக் கொண்டு வணங்குதல். தலை, கை இரண்டு, இரு செவிகள்,இரு முழந்தாள், மார்பு இவை நிலத்தில் படும்படி வணங்குதல்.

எண் நிலவு-மானதக் காட்சி.

எண் பேராயம் - கரணத்து இயல்வோர், கருமவதிகாரர், சுற்றத்தார், கடைகாப்பாளர், நகர மாக்கள், படைத்தலைவர், இவுளிமறவர், யானைவீரர்.

எண் மணம் - பிரமம், தெய்வம், பிரசாபத்தியம், ஆரிடம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம்

எண்மை - எளிமை.

எண்வகை - எட்டு வகை

எதிரது-வருவது.

எதிர்மறை உரை-இது இரண்டு, வெறும் எதிர்மறை உரை, பொருளுடைஎதிர்மறை உரை. அளவை சார்ந்தது.

எதிர்மறைமுகம் - எதிர்மாறுதலாகிய வாயில்

எதிரேகம், வெதிரேகம் - வேறுபாடு, எதிர்மறை.

எந்தாய் - எம் தலைவனே.

எந்தை - எம் இறைவன், என் தந்தை,

எம்பெருமான் - இறைவன், பெரியவன், பெருமை உடையவன்.

எம்மை - எப்பிறப்பு.

எய்தல் - அடைதல்,

எயில் - மதில்

எரி - நெருப்பு.

எரிசேர்ந்தவித்து-வறுத்த வித்து.

70