பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏர் கொள்

ஏழுவகை முனிவர்



ஏர் கொள் - எழில்மாகு, எ-டு ஏர்கொள் பொன் எயிலிடத்து (சி.சி.ப.ப154)

ஏர்மலி - எழுச்சிமிகு எ-டு ஏர்மலிபடை படைத்திட்டு (சி.சி. լյւյ297)

ஏய்ந்தமுறை-பொருந்தியமுறை.

ஏய்ந்தமுறை அடக்கம்- மந்திரங்கள் 11, பதம் 81, எழுத்து 51, புவனம் 224, தத்துவம் 36 கலை 5.

ஏயர்கோன் கலிக்காம நாயனார் - வேளாளர், பெருமங்கலம் சோழநாடு, சிவனைப் பரவையார்பால் சுந்தரர் தூதுவிட்டதைக் கண்டு மனம் நொந்து அவரைப் பார்க்கவும் மறுத்துத் தன் வயிற்றைக் கிழித்துக் கொண்டவர். இலிங்க வழிபாடு (63).

ஏயா - பொருந்தா.

ஏயாது - பொருந்தாது.

ஏயான் - பொருந்தான்.

ஏலா - ஏற்கமாட்டாத,

ஏலாமை - இயையாமை,

ஏவல் - கட்டளை. பணிவிடை எ-டு அழிப்பு அரி ஏவல் என்றாய் (சிசி பப 278)

ஏவுமுதியோன் - தொழிற்படுத்தும் முதியோன்

ஏழ் அதிகரணம் - சிவஞான போதம் மூன்றாம் வெண்பா ஏழு அதிகரணங்களைக் கொண்டது. இதுவே அதிக அதிகரணமுள்ள வெண்பா இவற்றால் ஆன்மா உளது என்று நிறுவப்பட்டுப் பிற சமயக் கொள்கைகள் மறுக்கப்படுகின்றன.

ஏழ்கடல் - ஏழுகடல்கள். எ-டு ஏழ்கடல் செலுவில் ஏற்றும் (சி.சி.ப.ப.267).

ஏழ்கடல் செலுவில்-திருமால் மீன் வடிவில் ஏழுகடல்களையும் ஒரே செலுவில் அடக்குதல் செலு-செவுள் பா.செலு.

ஏழ் பருவ மங்கை - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்.

ஏழு -1, சிவம், பதி, பசு, ஆணவம், கன்மம், சுத்த மாயை, அசுத்த மாயை 2. பார் ஏழு 3. விண் ஏழு 4. கடல் ஏழு.

ஏழு உலோகம் - பொன், வெள்ளி, செம்பு,இரும்பு, ஈயம், தரா, கஞ்சம் ஏழு திருமுறைகளிலும் பாடப் பெற்ற தலங்கள் : 1. திரு மறைக்காடு 2. காஞ்சிபுரம் 3. திருவாரூர்.

ஏழு பருவ மங்கையர்-பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்.

ஏழுவிடங்க தலங்கள் - 1. திரு ஆரூர் வீதிவிடங்கர் அசபா நடனம் 2. திருநள்ளாறு - நகரவிடங்கர்-உன்மத்தநடனம் 3. திருநாகைக் காரோணம் - சுந்தரவிடங்கர் - வீசி நடனம் 4. திருக்காறாயில் - ஆதி விடங்கர் - குக்குட நடனம் 5. திருக்கோளிலி - அவனிவிடங்கர்-பிருங்கநடனம் 6.திருவாய் மூர்-நீலவிடங்கர் கமலநடனம் 7. திருமறைக்காடு - புவனிலிடங்கர்- கம்சபாத நடனம்

ஏழுவகை இசைகள் - இனி, உழை,கைக்கிளை, குரல், துத்தம், தாரம், விளரி.

ஏழுவகை முனிவர்-கெளதமர், பரத்வாசர், விசுவாமித்திரர், சமதக்கனி, வசிட்டர், காசிபர், அந்திரி.

73