பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒவா

கடாவிடை


ஒவா - ஒழியா, எ-டு ஒவாத்தவமிக்கோர்.

ஒவாது - இடைவிடாது.

ஒவாமல்- ஒழியாமல்.

ஒவாமை - ஒழியாமை, எ-டு ஒவாமையன்றே உடல்(திப 44)

ஓவின போது - நீங்கும் காலை எ-டு ஓவினபோது சுத்தம்.

ஒள

ஒளடதம்- மருந்து. அருவிடம் நீக்கும் மருந்து.

ஒளத்திரி தீக்கை - சிவதீக்கை 7 இல் 1 எ-டு பரவிவரும் ஒளத்திரியால் பாசநாசம்.

க - பிரமன், திருமால்,ஆன்மா.

கங்குள் - இருள். v

கங்கை - 1. தீர்த்தங்கள் 9 இல் ஒன்று 2. சிவன் முடியில் இருப்பது

கஞ்சுகம் - சட்டை, பா. பஞ்ச கஞ்சுகம்.

கஞ்சுக சரீரம் - சட்டை உடல்

கடகம் - 1. காப்பு 2. இராசி 12 இல் ஒன்று.

கடம் - குடம் ஒ. படம்

கடம் படம் - குடம், புடவை, சீலை.

கடந்த - வென்ற

கடந்த நிலை அறிவியல் - மெய் யறிவியலின் ஒருவகை பட்டறிவைச் சாரா நிலையை ஆராய் வது.சைவசித்தாந்தம் ஏற்பது.

கடந்தை-திருப்பெண்ணாகடம்.

கடல் - 1. ஆழி. பெருங்கல், சிறு கடல் என இருவகை 2. நீர்க்கு இடங்கொடுத்து நிற்கும் வான்.

கடல்படுபொருள்கள்-பவளம், முத்து, சங்கு, ஒர்க்கோலை, உப்பு என ஐந்து.

கடவுள் - சிவம்.

கடவுள் இயல்பு - எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கி யாவற்றையும் கடந்திருப்பது. பா. இறைவன் இயல்புகள்.

கடவுள் இருவர் - சிவஞான போதம் மங்கல வாழ்த்தில் கூறப்பெற்ற மலைவில்லா ராகிய சிவன் என்னும் தென் முகக் கடவுளும் பொல்லா ராகிய பொல்லாத பிள்ளை யாரும்.

centerகடவுள் தொழில்கள்

பூதம் தெய்வம் தொழில்

1. மண் அயன் படைத்தல்

2. நீர் மாயன் அளித்தல்

3. தீ சிவன் அழித்தல்

4.கால் மகேசுரர் மறைத்தல்

5.வான் சதாசிவர் அருளல்

கடன் - கடமை. என் கடன் பணி செய்து கிடப்பதே.

கட்டி - வனப்பாற்றலாகிய பராசத்தி

கட்டு- தளை, பந்தம், தொடக்கு. பா. பெத்தம்

கட்டுரை - உறுதிமொழி.

கட்டுரைக்கல் - சொல்லுமிடத்து.

கடா - வினா.

கடாதி- குடல், கால் முதலியவை.

கடாவிடை - வினாவிடை புறச்சமயத்தார்க்கு வினா எழுப்பி, அதற்குச் சிவஞான சித்தியார் கூறும் விடை எ-டு துறை பலவும் கடாவிடையால் சொல்லிப் போக்கித் துகள்தீர இந்நூலில் சொல்லகிற்பாம்(சி.சி.ப.ப 11)center81.