பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிய பிறப்பு

கண்ணப்பன்


கடிய பிறப்பு- துன்பப் பிறப்பு.
கடிவின்றி- நீக்கமின்றி.
கடுகம் - சுக்கு, திப்பிலி, மிளகு என மூன்று. கடுநரகக்கொடுமைகள்-1மையல் தரும் செக்கில் இடைத்திரித்தல் 2 தீவாய் இட்டு எரித்தல் 3. தக்க நெருப்புத்துண் தழுவுவித்தல் 4. நாராசம் காய்ச்சி செவிமடுத்தல் 5 நா அரிதல் 6. அவரவர் ஊனை அவரவரே தின்னுமாறு அடிக்கப்படுதல் இம்மை வாழ்வில் பாவம் செய்பவர்கள் இக்கொடுமைகளுக்கு உள்ளாவர். (போப45).
கடுநரகு - கொடிய நரகம்
கணக்கு - முறைமை, முறையீடு.
கணநாதநாயனார்-மறையவர். சீர்காழி-சோழநாடு திருக்கோணி யப்பருக்குச் சரியை கிரியை செய்தவர். குருவழிபாடு (63).
கண பங்கம் -கணந்தோறும் தோன்றி அழிதல்.
கணபங்க வாதம் - எல்லாப் பொருள்களும் கணத்தில் அல்லது நொடியில் அழியும் என்னுங் கொள்கை. இக்கொள்கை உடையவர் கணபங்கவாதி.
கணம் -கூட்டம் நொடி எடு தேவகணம்.
கணம்புல்லநாயனார்- இருக்கு வேளுர்-சோழநாடு கணம்புல் அறுத்து விற்று நெய்விளக்கிட்டவர். இலிங்க வழிபாடு (63).
கணவகை - இது 18, 1. அமரர் 2. சித்தர் 3 அசுரர் 4 தைத்தியர் 5. கருடர் 6 கின்னர்ர் 7 நிருதர் 8 கிம்புருடர் 9 காந்தருவர் 10, இயக்கர் 11 விஞ்சையர் 12 பூதர் 13. பைசாசர் 14அந்தரர் 15.முனி வர் 16.உரகர்17 ஆகாயவாசிகள் 18. போகபூமியர்.
கண்-1ஒளி 2ஓர் அறிவுப்பொறி ஐம்பொறிகளில் ஒன்று. ஊனக் கண், ஞானக்கண் என இரு வகை 3. கருதியுணர்தல் 4.துணை
கண் அகல் ஞாலம் - அகண்ட புவியாகிய உலகம்.
கண் இருள் - அக இருள்.
கண்டஉரு - காணப்பட்ட சிவ லிங்கம்.
கண்கூடு - பிரத்தியட்சம்.
கண்டதை - சுட்டி உணரப்பட்ட உலகப் பொருள்.
கண்டத்தை - 1 எதையும் எ-டு கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவர் (திகப 8) 2. உடம்பையும் முப்பொருளையும் கொண்டு3. கண்ணில் காணும் ஆசிரியர்.
கண்நயப்பு - கண்நலம். எ-டு நாயகன் கண்நயப்பு.
கண்நுதல்-வெற்றித்திருநோக்கு. கண்ட நூல் - பிரமாண நூல்.
கண்டம் - கழுத்து, மிடறு,குரல்வளை.
கண்டராதித்தர் - 9 ஆம் திரு முறை நூலாசிரியர் 9 பேரில் ஒருவர்.
கண்டவியன் கட்டில் - கனவு வீடாகிய கண்டம்.
கண்டனம் - முடியும் எ-டு கண்டனம் தொழிலுக்கு என்னில் (சிசிசுப 30).
கண்ணப்பன் - கண்ணப்ப நாயனார்-வேடர்,உடுப்பூர்தொண் டைநாடு. சிவலிங்கத்தின் கண்ணில் குருதி வந்த போது, தம் கண்ணைப் பிடுங்கி அதில் அப்பியவர். இலிங்க வழிபாடு அன்பிற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.கண்ணப்பன் ஒப்பதோர் அன்பதனைக் கண்ணப்பர் (திப 52)