பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கமன தான விசர்க்க ஆனந்தம்

கருட தியானம்



னும் மாறிப்போன கட்டளைப் பொருள்களை 'அமுதுசெய்க'என்று மனத்திலே பயமில்லாமல் தம்முடைய கழுத்தை அரிந்து அச்சிவபிரானுக்குப் படைத்துப் பிறவிவேர் அரிந்து மூன்று பாசத்தையும் விட்டவர் அரிவட்டாய நாயனார். இங்கு வல்வினை மெல்வினையே ஆயிற்று (திப 20 பா. செய்யில் உகுத்த.

கமனதான விசர்க்க ஆனந்தம் -மொழி, கால், கை, எருவாய், கருவாய்.

கமை ஒற்றி - புலனடக்கி

கமையாக்காதல் - நிறைவற்ற அன்பு, எ-டு கமையாக்காதல் அமை சாது பழிச்சும் (சிநி1)

கயம் - யானை,

கரசரணாகதி சாங்கம் - தரப் பட்ட திருக்கை, திருவடி முதலியவை.

கரணம் - கருவி, மூவகை 1.அகக்கருவி: 1. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் 2. மனம், வாக்கு, காயம்

2.உள் அகக்கருவி : காலம், நியதி, கலை, வித்தை, அராகம் (பஞ்ச கஞ்சுகம்).

3.புறக்கருவி: மெய், வாய், கண்,மூக்கு, செவி. 4.மாயையின் காரியத்தைத்தனு, கரணம், புவனம்,போகம் என நான்காகக் குறிப்பிடுவது சித் தாந்த வழக்கு தத்துவங்களைக் காரியமாக உடம்புகளும் உலகங்களும் ஏனைய உலகப் பொருள்களும் உள்ளன.அவை முறையே தனு, கரணம்,புவனம், போகம் என நான்காகக் கூறப் பெறும் .

5.அங்கம் 5 இல் ஒன்று.

6.பசுகரணம், சிவகரணம். கரணமாறாட்டம்-அகக்கருவிப்பிரிவு.

கரப்பு - கரப்பான். கரம்மன் ஆள் திகிரி ஏற்றான்கையில் ஆழிகொண்டு ஆட்சி செய்யும் திருமால்.

கராம் - ஆண் முதலை. எ-டு காலனை அன்று ஏவிக் கராம் கொண்ட பாலன் (திப 12)

கரி - யானை அங்கம் 4 இல் ஒன்று.

கரிமா - உடலை அதிகக்கன மாக்கிக் கொள்ளுதல் 8 சித்திகளுள் ஒன்று.

கரியவை - தீயவை எடுகரியவை உண்டேல் காட்டீர் (சிசிபப32)

கரு ஒன்றி நில்லார் - பிறந்து இறவாதவர்

கருத்தா-காரணன், செய்வோன்,முதல்வன். ஒ. அகர்த்தா.

கரு - உயிர், கருப்பம்.

கருப்பம் - காரணம்.

கருமேனி - மாய உடம்பு

கருடன் - கருடப்பறவை. இது ஆதி பெளதிகம்,ஆதி தைவிகம்,ஆத்தியான்மிகம் என மூவகை முதலாவது உலகத்தில் காணப்படுவது. அதற்கு ஆதி தெய்வமாகிய மந்திரம் ஆதிதைவிகக் கருடன். அம்மந்திரத்தின இடமாக நின்று, மாந்திரிகனுக்குப் பயன் அளிப்பதாகிய சிவசத்தி, ஆத்தியான்மிகக்கருடன்ஆகும்.

கருட தியானம் - கருடனை நினைத்தல். பாசத்தோடு பிணைந்துள்ளது உயிர். அப் பாசத்தினின்றும் விடுபடச் சிவோகம் பாவனையை அது

84