பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்லால் நிழற் கடவுள் வரலாறு

கலை அடக்கம்


தேவர் திருமறம் பாடியவர் இத்திருமுறை நூல்களை இயற்றிய 12 பேரில் ஒருவர். கல்லால்நிழற்கடவுள் வரலாறுஇவர் தென்முகக்கடவுள். சிவபெருமான் வடிவங்களுள் ஒன்று. ஞானம் விரும்புபவர்கட்குச் சிவன் குருவடிவிலிருந்து அதனை அருளும் வடிவம். ஒரு காலத்தில் சனகர், சனந்தனர், சனாதரர், சனற் குமாரர் என்னும் 4 முனிவர் சிவனிடம் ஞானம் பெற்றனர். பின்,சிவன் ஒரு காலத்தில் நந்தி தேவருக்குச் சைவாகமங்கள் பலவற்றைச் சொல்லி,அவை பற்றிய ஐயங்களை நீக்கி அருளி னார். அவ்வாறு ஐயம் நீக்கியது சிவஞான போதத்தின் வழியே. கல் ஆல் என்பது ஒரு வகை மரம். அதனடியில் தென் முகக்கடவுள் வீற்றிருக்கின்றார் என்பது மரபு.

கல்லே மிதப்பாய் - கல்லில் கட்டிக் கடலில் தள்ளினும் பிழைத்து வந்த திருநாவுக்கரசர் பா. திருநாவுக்கரசர் அற்புதங்கள்.

கல்வி - அறிவை வளர்க்குங்கருவி. கல்வி கரையில,

கலாதி - கலை, காலம், வித்தை,இராகம், புருடன் என ஐந்து

கலாருபம் - கலை வடிவம். 64 எனப்படும் கேசரவடிவம். இதில் நிலம் முதலிய 24 தத்து வங்களும் வித்யா தத்துவம் ஏழும் சுத்த தத்துவம் ஒன்றும் அடங்கும்.

கலி - செருக்கு, எ-டு கலிஆழ்வேனை நின் (இஇவ)

கலிக்கம்ப நாயனார் - வணிகர் பெண்ணாகடம்-நடுநாடு சிவனடியார்க்கு நாள்தோறும் திரு வமுது அளித்தவர். சங்கம வழிபாடு (63)

கலிய நாயனார் - 'செக்கார். ஒற்றியூர் - தொண்டை நாடு. திருவிளக்குப் பணி செய்தவர். இலிங்க வழிபாடு (63)

கலை - உலகப்பகுதிகள். சுத்த மாயையின் காரியம், அத்துவா 6 இல் ஒன்று.ஆயகலைகள் 64 என்பது ஒருவழக்கு, தத்துவ முறைப்படி அது ஆறு வித்தை, அராகம், காலம்,நியதி, புருடன், மாயை. பொதுவாகக் கலையில் அழ குணர்ச்சி முந்தி, அறிவு பிந்தி,கன்மத்திற்குப்பின் தோன்றி, ஆணவத்தை ஒதுக்கிச் சித்தின் செயல்புரி கிரியா சத்தியைத் தெரிவிப்பது மந்திரம்,பதம்,வன்னம், புவனம்,தத்துவம் ஆகியவற்றைத் தன்னுன் அடக்கியது.

கலை அடக்கம் - ஒவ்வொரு கலையின் அடக்கம் பின்வருமாறு. 1.நிவர்த்தி கலை அடக்கம் - மந்திரம் 2, பதம் 28, இறுதி எழுத்து 1, புவனம்108. பிருதிவி தத்துவம் 1. அதி தெய்வம் அயன் (பிரமன்)

2.பிரதிட்டா கலை அடக்கம் - மந்திரம் 2, பதம் 21, எழுத்து 24, புவனம் 56. தத்துவம் 23, அதிதெய்வம் மால்.

3.வித்தையின் அடக்கம்-மந்திரம் 2, பதம் 20, பொருந்திய எழுத்து 7, புவனம் 27, வித்தியா தத்து வம் 7, அதிதெய்வம் உருத்திரன்.

4.சாந்திகலை அடக்கம்-மந்திரம் 2, பதம் 11, எழுத்து 3, புவனம் 18. தத்துவம் 3, அதிதெய்வம்

ஈசன்

86