பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சிப் பொருள்

காதலிப்பவர்


 கர்மம், பொருள் என்னும் ஐந்தையும் சேர்த்தறிவிப்பது இது. இதற்குச் சிவாக்கிர யோகியர் தரும் எடுத்துக் காட்டு. 1. பெயர்: மா 2, சாதி மரம் 3 குணம்: வண்ணம், வடிவு, பூ காய், பழம் முதலியன 4. கர்மம் (வினை): அசைதல், நிற்றல், பூத்தல், காய்தருதல் 5. பொருள்: இன்னது பெறும் விலை, இன்னதுக்கு ஆன பொருள் என இவ்வாறு வேறுபடுத்தி அறிவது சவிகற்பக் காட்சியாகும்.

காட்சிப்பொருள்-காணப்படும் பொருள்.

காட்சி, மாசறு - குற்றமில்லாக் காட்சி.

காட்சியளவை - அளவைகளில் ஒன்று. இது ஒன்றே போதும் என்பது உலகாயதர் கருத்து. இதைக் கொண்டு அவர்கள் ஆன்மவாதத்தைப் பெற இயலாது. வானம் ஒழிந்த ஏனைய 4. பூதங்களின் சேர்க்கையே ஆன்மா என்பது ஆன்மவாதம் அமாவாசை, கோள் மறைவு முதலியவை உரையனவாலேயே அறியப்படுபவை. காட்சியளவையாலன்று. ஆகவே, இவர்கள் கூற்றுபொருந்தாக் கூற்றே.

காட்சிவாதி-உலகயாதன். பிரத்தியட்சமே பிரமாணம் என்பவன்.

காட்டம் - விறகு,

காட்டாக்கின் - காட்டத்தி லிருந்து (விறகிலிருந்து)நெருப்பு தோன்றுதல்.

காட்டாக்கினி-விறகு நெருப்பு.

காட்டாகிநின்றான்-உயிருக்குள் இறைவன் இருப்பதால், உயிர் இறைவனை அறிய முடிய வில்லை. தன்னை அறியாவிடினும் இறைவன் உயிர்கள்பால் கலந்துநின்று அவைகளுக்குப் பொருள்களை உணர்த்துவது இயல்பு.

காட்டிற்றை-காட்டியதை

காட்டு-காண்பித்து,துணை.

காடுபடுபொருள் - அரக்கு, இறால், தேன், மயிற்பீலி, நாவி என ஐந்து

காண்க - அறிக.

காண்டம் - தத்துவத்தொகுதி. இது மூவகை 1.பிரேரக காண்டம்: சிவம் முதலிய தத்துவங்கள் ஐந்தும் தமக்குக் கீழுள்ள தத்துவங்களைச் செலுத்துபவை. ஆகவே, அவை பிரேரக காண்டம் எனப்படும். 2. பாசயித்திரு காண்டம்: வேறு பெயர் நுகரி காண்டம் போச யித்திரு நுகரி, காலம் முதலிய 7 தத்துவங்கள் உயிருக்கு ஆண வத்தால் உண்டான சடத்தன்மை நீங்கி, அறிவு இச்சைச் செயல்கள் சிறிதே விளங்கப் பெற்று வினையை ஈட்டவும் நுகரவும் காரணமாக இருப்பதால், இவற்றிற்கு இப்பெயர். 3.போக்கிய காண்டம் ஆன்ம தத்துவங்களைக் கொண்ட உயிர் முக்குண வடிவமான இன்பம், துன்பம், மயக்கம் என்பவற்றை அடைவதால், இவற்றிற்கு இப்பெயர்.

காண்டல் - ஐயுறவின்றித் தெளிதல்.

காணார் - உணர்த்தார்.

காதல்-இறைவன்பால் அடியார் கொள்ளும் அன்பு, எ-டு கண்ணப்பர் அன்பு.

காதலிப்பவர்-முத்தி பெற விரும்பும் வைநாயிகராயினார்.

90