பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வழியாகிய சுரத்திலே வாழும் மறவர்கள் தம் குல தெய்வமாகக் கொற்றவையை வழிபட்டமையால் நடுவு நிலைத் தினையாகிய பாலைக்குத் தெய்வம் கொற்றவை என்னும் பொருள்நிலக்கணமரபு. கடைச் சங்க காலத்தில் உருவாகியதெனக் கருத வேண்டியுள்ளது.

காடுறையுலகம், மைவரையுலகம், தீம்புனலுலகம், பெருமனலுலகம் என்னும் நானிலங்களுக்கும் அன்பின் ஐந்தினைகளுள் இருத்தல் புணர்தல் ஊடல் இரங்கல் என்னும் நால்வகை யொழுக்கங்களையும் முறையே உரிமை செய்துணர்த்திய தொல்காப்பியனார், நிலமில்லாத பாலைத்தினைக்கு

“நடுவுநிலைத்திணையே நண்பகல் வேனிலொடு

முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே (அகத். 11)

என வரும் நூற்பாவில் இடமும் காலமும் வகுத்துக் கூறியுள்ளார். “முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் என எண்ணப்பெறும் ஐந்தினைகளுள் நடுவண் நிற்பதாகிய பாலைத் திணையாகிய பிரிவொழுக்கம் நண்பகலாகிய சிறுபொழுது வேனில் என்னும் பெரும்பொழுதுடன் கூடிய நிலையிற் (காதலர்) கருதிச் செல்லும் வழியினை இடமாக வுடையது” என்பது இந்நூற்பாவின் பொருளாகும். இந்நூற்பாவின் பொருளைக் கூர்ந்து நோக்குங்கால் தமிழகத்திற் பாலையென்பதோர் தனிநிலம் எக்காலத்தும் இருந்ததில்லையென்பதும் வேனிற் காலத்திலே கதிரவனது வெம்மையால் வளங்குன்றிய வெவ்விய நெறியாகிய சுரமே பாலைத்திணைக்குரிய இடமென்பதும் தொல்காப்பியனார் கருத்தென்பது பெறப்படும்.

"வானமூர்ந்த வயங்கொளிமண்டிலம்

நெருப்பெனச் சிவந்த உருப்பவிரங்காட் டிலையில மலர்ந்த முகையிலிலவம்’ (அகநா. 11)

எனவரும் அகப்பாடல் காடுறையுலகமாகிய முல்லை நிலம் வேனிற்காலத்துக் கதிரவன் கடுவெயிலால் தன்னியல்வு திரிந்து பாலையாயின செய்தியைப் புலப்படுத்துகின்றது.