பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பாலையாகிய சுரத்திற்குத் தெய்வமாதல் பெரிதும் பொருத்தமுடைமையும் எண்ணிய சேக்கிழாரடிகள் பாலைநிலத் தெய்வம் கொற்றவை என்னும் இளங்கோ வடிகள் கருத்தினை அடியொற்றி,

"கோலமுல்லையுங் குறிஞ்சியுந் திரிந்த சில்லிடங்கள்

நீலவாட்படை நீலி கோட்டங்களும் நிரந்து காலவேனிலிற் கடும் பகற் பொழுதினைப் பற்றிப் பாலையுஞ் சொல்லாவனவுள பரன்முரம்பு’

எனவரும் பாடலிற் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். "கதிரவன் வெம்மையினாற் கடும் பகற்பொழுதில் அழகிய முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் திரிந்து வளங்குறைந்த சில இடங்கள் நீலமேனியளாகிய கொற்றவை வீற்றிருக்கும் கோயில்களைத் தன்னகத்தே கொண்டு பாலையென்று பெயர் சொல்லுதற்குரியனவும் தொண்டைநாட்டில் உள்ளன” என்பது மேற்குறித்த பெரியபுராணச் செய்யுலில் இடம் பெற்ற செய்தியாகும்.

உலகிற் காலந்தோறும் ஏற்படும் கடல்கோள், புயல், வெள்ளம், நிலநடுக்கம் முதலிய இயற்கை மாற்றங்களாகிய இடையூறுகளையும் மக்களுக்குத் தீங்குபயக்கும் கொடிய உயிரினங்களால் நேரும் இடர்களையும் எதிர்ந்து முன்னேறும் இன்றியமையாமையுடைய மக்கட் குலத்தார் தமது வாழ்க்கை நுகர்ச்சிகளின் பயனாகத் தமக்கு நாள்தோறும் அச்சந் தவிர்த்து தம்முள்ளத்தேயிருந்து ஆண்மையும் அறிவாற்றலும் வழங்கித் தோன்றாத் துணையாய் உடனிருந்து அருள்புரியும் பேரருளும் முற்றுணர்வும் பேராற்றலும் வாய்ந்த முழுமுதற் கடவுளாகிய தெய்வம் ஒன்று உண்டு என்னும் உணர்வினைப் பெறுவாராயினர். யாக்கை, இளமை, செல்வம் முதலிய வற்றால் நிலை பேறில்லாத இவ்வுலக வாழ்க்கையிற் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வாழ்ந்துவரும் பயிற்சியினைப் பெற்ற மக்கள் அறியாமையிருளிலகப்பட்டு அணங்குபேய் முதலியவற்றால் அஞ்சிவருந்திய அச்சத்தினை யகற்றித் தம் உள்ளுணர்வின் தூண்டுதலால் ஆண்மையும் அறிவும் பெற்றுத் திகழ்ந்த காலம் தமக்கு உயிர்க்குயிராய்த்