பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

99


தோன்றாத்துணையாய் உடனிருந்தருளும் தெய்வமென்பது ஒன்று உண்டு எனத் தெளிவுடைய சிந்தையினைப் பெற்ற காலமேயாகும். மக்கள்தெய்வமுண்டு என்னும் இத்தகைய தெளிவு பெறாது இருந்த காலமும் உண்டு என்பதனை,

“தேசம் உமையறிவதற்கு முன்னோ பின்னோ

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே”

எனவரும் திருநாவுக்கரசர் வாய்மொழியால் நன்குணரலாம்.

இயற்றமிழ் நூலாகிய தொல்காப்பியத்தை இலக்கணமாகக் கொண்டு பாடப்பெற்றனவே சங்க விலக்கியங்கள். எனவே இவற்றின் முன்னுலகிய தொல்காப்பியங் கூறும் தெய்வ வழிபாடுகளும் சமயத்தத்துவ வுண்மைகளும் சங்க இலக்கியங்களிலும் இடம்பெற்றிருத்தல் இயல்பேயாகும்.

இனி, அகமும் புறமுமாகிய உலகியலொழுக லாறுகளை விரித்துரைப்பனவே சங்கச் செய்யுட்கள் எனவும், இவ்விலக்கியங்களிற் கடவுட் கொள்கைக்குச் சிறப்பிட மில்லை எனவும் பத்துப்பாட்டுள் முதற் பாட்டாகிய திருமுருகாற்றுப்படையும் எட்டுத்தொகை நூல்களின் முன்னர் அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல்களும் கடைச் சங்க காலத்தன அன்றிப் பிற்காலத்திற் பாடிச் சேர்க்கப் பெற்றன எனவும் கருதுவாரும் உளர். திருமுருகாற்றுப் படையில் விரித்துக் கூறப்படும் செவ்வேள் வழிபாடும் எட்டுத்தொகைக் கடவுள் வாழ்த்துப்பாடல்களில் இடம் பெற்றுள்ள சிவபெருமான் திருமால் ஆகிய இருபெருந் தெய்வங்களின் வழிபாடுகளும் சங்கத் தொகைகளின் புறத்தேயுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களில் மட்டுமன்றி அத்தொகைகளின் அகத்தேயுள்ள செய்யுட்கள் பலவற்றிலும் சிறப்பிடம் பெற்றுள்ளன. சங்கச் செய்யுட்களில் நக்கீரனாரும் சங்கப்புலவர் பிறரும் பாடியனவாக அமைந்த பாடல்களில் உள்ள தொடர்களும் கருத்துக்களும் திருமுருகாற்றுப்படையிலுள்ள தொடர்களும் கருத்துக் களும் தம்முள் ஒத்துக் காணப்படுகின்றன. பத்துப்பாட்டுள் முதற் பாட்டாக வைத்து எண்ணப்படும் திருமுருகாற்றுட்