பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மைந்தன் இருந்தான் என்ற செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பெற்றுளது. நல்லடி என்னும் பெயருடைய வேந்தன்,

'கடும் பகட்டியானைச் சோழர் மருகன்

நெடுங்கதில் நெல்லின் வல்லங்கிழவோன் நல்லடியுள்ளானாகவும்” (அகநானுாறு 367)

எனப் பரனாற் பாராட்டப் பெற்றுள்ளான். இங்ங்னம் அகநானூற்றிற் பாராட்டப்பெறும் சோழன் நல்லடி என்பானுக்குத் தந்தையாகச் சோழன் செங்கணான் திருவாலங்காட்டுச் செப்பேட்டிற் குறிக்கப்பெற்றுள்ளான். இவ்வேந்தன் சோழநாட்டின் உட்பகுதிகளாகிய அக நாடுகள் தோறும் சிவபெருமானுக்கு மாடக்கோயில்களைக் கட்டியுள்ளான் எனத் தேவார ஆசிரியர்களும் சிவபெருமானுக்கு எழுபது மாடக் கோயில்களைக் கட்டிய இவ் வேந்தனே திருமாலுக்குத் கிருநறையூரில் மணிமாட மாகிய திருக்கோயிலையும் கட்டினான் எனத் திருமங்கை யாழ்வாரும் குறித்துப் போற்றியுள்ளார்கள். இக்குறிப்புக் களால் கடைச் சங்க காலத்திலேயே சிவபெருமான் திருமால் முதலிய தெய்வங்களுக்குப் பெருங்கோயில் கட்டும் திருப்பணிகள் தொடர்ந்து நிகழ்ந்தன என்பது உய்த்துணரப்படும்.

“பணியியரத்தை நின்குடையே, முனிவர்

முக்கட் செல்வர் நகர் வலஞ்செயற்கே’ (புறம் 6)

எனப் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடிய பாடல் கடைச்சங்க காலத்திற் பாண்டி நாட்டிற் சிவபெருமானுக்குத் திருக் கோயில் அமைந்திருந்த செய்தியை நன்கு வலியுறுத்தல் éEsTGSGI Stoff, D.

தமிழ் மக்களது மெய்யுணர்வுக் கொள்கையினை உள்ளவாறு உணர்தற்கு அவர்களால் வழிபடப் பெற்ற தெய்வ அமைப்புக்களையும் வழிபாட்டு முறைகளையும் உலக வாழ்க்கையில் தமிழ் முன்னோர் கொண்டிருந்த பல்வேறு