பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தொகை நூல்களில் இடம் பெற்றுள்ள சிறு தெய்வ வழிபாடுகள் இவையெனக் காண்போம்.

அணங்கு, பேய், பூதம், சூர்

‘அணங்கு என்ற சொல், "வருத்தும் தெய்வம் என்ற பொருளிற் சங்கச் செய்யுட்களில் ஆளப் பெற்றுளது. அணங்குதல் - வருத்துதல்.

"அணங்கே விலங்கே கள்வர் தம் இறையெனப்

பிணங்கல் சாலா அச்சம் நான்கே” (தொல். மெய்ப். நூ. 252)

எனவரும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்தில், அச்சச் சுவைக்குரிய பொருள்களாக அணங்கு, விலங்கு, கள்வர், தம் தலைவன் என்னும் நான்கினைக் குறிப்பிடுவர் தொல்காப்பியனார். இங்கு அணங்கு என்றது, கண்டார்க்கு அச்சத்தினைத் தரும் பேய், பூதம் முதலிய சிறு தெய்வங்களை அறிவு நிரம்பாத மக்களை வருத்தும் இயல்பினவாதல் பற்றி அவற்றிற்கு 'அணங்கு என்பதும் ஒரு பெயராயிற்று, அனங்கு என்னும் இச் சொல் அச்சுறுத்துவதாகிய பேய் என்ற பொருளிலும் ஆளப்பெற்றுள்ளது.

“வெண்டிரைப்பரப்பிற் கடுஞ்சூர் கொன்ற

டைம்பூட்சேஎய்பயந்த மா மோட்டுத்

துணங்கையஞ் செல்விக்கு அணங்கு நொடித்தா அங்கு”

(பெரும்பாண். 457-459)

எனவரும் பெரும்பாணாற்றுப்படைத் தொடர்க்கு, “வெள்ளிய திரையினையுடைய கடலிலே சென்று கடிய சூரனைக் கொன்ற பசிய யூனினையுடைய முருகனைப் பெற்ற பெருமையையுடைய வயிற்றினையும் பேய்கள் ஆடுந் துணங்கைக் கூத்தினையும் அழகினையும் உடைய இறைவிக்குப் பேய்மகள் சில நொடி சொன்னாற் போல” என நச்சினார்க்கினியர் உரை வரைந்துள்ளார். இத்தொடரில் துணங்கையஞ் செல்வி என்றது, கானகம் உகந்த காளியாகிய தெய்வத்தை. அணங்கு என்றது, அத்தெய்வத்தின் கூளிச் சுற்றமாகிய பேய்மகளை. மேற்குறித்த பெரும்பாணாற்றுப்