பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

113


நெடுஞ்செழியனுடைய படை வீரர்களாற் பகைவர் நாடு பாழாயின செய்தியை விரித்துரைப்பதாக அமைந்தது,

“அவையிருந்த பெரும்பொதியிற்

கவையடிக் கடுநோக்கத்துப்

பேய்மகளிர் பெயர்பாட

அணங்குவழங்கும் அகலாங்கண்

நிலத்தாற்றுங் குழுப்புதவின் அரந்தைப்பெண்டிர் இணைந்தனர் அகவ’ (மதுரைக் 161-6)

எனவரும் மதுரைக் காஞ்சித் தொடராகும். “சான்றோர் இருந்த அம்பலங்களிலே இரட்டையான அடிகளையும் கடிய பார்வையினையும் உடைய பேயாகிய மகளிர் அடிபெயர்த்து ஆட, இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரிடத்தே நிலத்திலுள்ளாரையெல்லாம் அனுப்பும் வாயில் காவலரையுடைய வாயிலின் கண்னேயிருந்து மனக்கவற்சியினையுடைய மகளிர் வருந்தி அரற்ற” என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும்.

"வருத்துதல் என்னும் பொருளுடைய 'அணங்கு” என்னுஞ்சொல் வருத்துதலையுடைய தெய்வம்’ என்ற பொருளிற் சங்கச் செய்யுட்களிற் பலவிடங்களிலும் ஆளப்பெற்றுள்ளது. ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் உலகத்தாரறியாது மறைந்தொழுகும் களவு வாழ்க்கையில் தலைவன் தன்னால் தலையளிக்கப்பெறும் தலைவியை நோக்கி, நின்னைவிட்டு ஒரு காலத்தும் பிரிய மாட்டேன்’ எனத் தான் வழிபடும் தெய்வத்தின் முன்னிலையிற் சூளுரைத்து அவளுள்ளத்தே தன்னைப் பற்றிய நம்பிக்கை தோன்றும்படி உறுதிமொழி கூறுதல் இயல்பு. இவ்வாறு தெய்வத்தின் முன்னிலையில் உறுதி கூறுதலை முன்தேற்று’ என்பர் தொல்காப்பியர். இவ்வாறு தெய்வத்தின் முன்னிலையில் உறுதி செய்தார் அவ்வுறுதி மொழியில் தவறுவராயின் அவர் செய்த சூளுறவே அவரை வருத்தும் என்பதும், தன் முன்னிலையிற் செய்த சூளுறவினின்றும் தவறிய கொடியோரைத் தெய்வம் வருத்தும் என்பதும் பண்டைத் தமிழர் வாழ்வியலிற்

சை, சி. சா. .ை 8