பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


புனையிருங்கதுப்பின் நீகடுத்தோள்வயின் அனையேனாயின் அணங்குக என் என மனையோட்டேற்றும் மகிழ்ந் நனாயின் யார் சொல் வாழி தோழி நெருநல் தார்பூண் களிற்றின் தலைப்புணைதழி இ வதுவையிரணிப் பொலிந்து நம்மொடு வந்தகாவிரிக் ليلة 5 يناس கோடுதோய் மலிர்நிறை ஆடியோரே” (அகம். 166)

“பழைய பல்வகை நெல்வளத்தையுடைய வேளுர் வாயிலின்கண்ணே நறுமணநீர் தெளிக்கப்பெற்ற மனம் வீசும் பூங்கொத்துக்களால் ஆகிய மாலையினைப் புள்ளிகள் நிறைந்த வரிகளோடு கூடிய வண்டு தெய்வத்திற்குரிய மாலையென்று அஞ்சித் தேனுண்ணாது ஒழிவதற்குக் காரணமான உயர்ந்த பலிகளைப் பெறும் அச்சந்தரும் தெய்வம், அணிசெய்த கரிய கூந்தலையுடையளாய் நின்னால் ஐயுறப் பெற்றாளாகிய பரத்தையுடன் புனலாடிய அத்தன்மை யுடையேனாயின் என்னை வருத்துவதாகுக என்று சூளுரைத்துத் தலைவன் தன் மனைவியைத் தெளியக் கூறுவானாயின் நேற்று இருகரையும் பெருகப் புதிதாக வந்த காவிரியின் நீர்ப்பெருக்கிலே தாரணிந்த களிற்றினைப் போன்று புனையின் தலையிடத்தைத் தழுவியிருந்து வதுவைக்குரிய பெரிய அணியாற் பொலிவுபெற்ற நம்முடன் கூடிப் புனலாடினோர். அத்தலைவரன்றிப் பிறர் யாரோ?” என்பது மேற்குறித்த பாடற் பகுதியின் பொருளாகும்.

இங்ங்னம் அகத்தினையொழுகலாறாகிய களவிலும் கற்பிலும் தெய்வத்தின் திருமுன்னர்ச் சூளுறவு செய்தலாகிய இந்நிகழ்ச்சி, மக்களது குடும்பவாழ்வுக்கு உறுதுணையாகத் தெய்வத்தை முன்னிறுத்தி அதன் திருவருள் வழி அடங்கி யொழுகிய மக்களது தெய்வங்கொள்கையினை நன்கு வலியுறுத்தும் முறையில் அமைந்துள்ளமை இங்கு மனங்கொளற் பாலதாகும்.

இவ்வாறு தன் முன்னிலையில் அன்புடையார்க்குச் சொன்ன உறுதிமொழியிலிருந்து தவறுதல் முதலிய