பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

119


கொடுமை செய்தவர்களை ஒறுத்து அடக்குதலும் அன்புடைய நல்லோர்களைப் பாதுகாத்தலும் தெய்வத்தின் இயல்பாகும் என்பதும் தவறு செய்தோரைத் தெய்வம் ஒறுத்து அடக்கும் என்பதனை உணர்ந்தவர்கள் தெய்வத்தின் முன்னர்த் தாம் செய்த சூளுறவினின்றும் தவறமாட்டார்கள் என்பதும் ஆகிய எண்ணங்கள் மக்கட் சமுதாயத்தில் வேரூன்றியிருந்தால் தெய்வத்தின் முன்னிலையில் தலைவன் முதலியோர் சூளுறவு செய்தலும் அச்சூளுறவினைத் தலைவி முதலியோர் நம்பி யொழுகுதலும் ஆகிய உலகிய லொழுகலாறுகள் செவ்வனே நிகழ்தல் கூடும். உலகில் பிறவுயிர்கட்குத் துன்பஞ் செய்யுமியல்பினராகிய கொடியோர் களை ஒறுத்து வருத்துதலும் பிறவுயிர்க்கு ஒருசிறிதும் தீங்கு எண்ணாத நல்லியல்புடையவர்களை இடர்நீக்கிக் காத்தலும் தெய்வத்தின் இயல்பு என்னும் மெய்ம்மையினைச் சங்க காலத் தமிழ் மக்கள் நன்குனர்ந்து தமது வாழ்க்கையினை நன்முறையில் அமைத்துக் கொண்டனர். தெய்வ நம்பிக்கையின் விளைவாக அமைந்த இவ்வாழ்வியல் நெறிமுறை,

“மன்ற மரா அத்தபேள முதிர் கடவுள்

கொடியோர்த் தெறுஉம் என்ப கொடியரல்லர் எம் குன்று கெழு நாடர்’ (குறுந் 87)

எனத் தலைவியொருத்தி தன் ஆருயிர்த் தலைவனைப் பொறுத்தருளும்படி தெய்வத்தை அன்பினாற் பரவுவதாக அமைந்த குறுந்தொகைப்பாடலால் இனிது புலனாம்.

அலைகள் கிளர்ந்தெழும் கடற்றுறையிலும் வானுற வோங்கிய மலையடுக்கங்களிலும் மரங்கள் செறிந்த காடுகளிலும் நீர்த்துறைகளிலும் முதிர்ந்த பெரிய ஆல் வேம்பு கடம்பு முதலிய மரங்களின் அடிகளிலும் பலவழிகள் ஒன்று கூடும் சந்திகளிலும் தெய்வம் உறையும் என்று பண்டையோர் நம்பினார்கள். அந் நம்பிக்கையின் விளைவாக,அவ்விடங்கள் பலவும் மக்கள் அச்சத்துடன் அணுகி வழிபடுதற்குரிய தெய்வ நிலையங்களாயின. இச்செய்தி, அணங்குடைப் பனித்துறை (ஐங். 174), அனங்குடை நெடுங்கோடு (புறம். 52), அணங்குடை முருகன் கோட்டம்’ (புறம். 299) எனவரும்