பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

121


நடுங்காநிற்க எனப் பொருள் வரைந்தார் நச்சினார்க்கினியர். தெய்வம் உயிர்கள்மேல் ஆவேசித்தல் உண்டு என்பதும் அவ்வாறு தெய்வம் ஏறப்பெற்ற உயிர்களின் உடம்பு நடுக்கமுற்று ஆடாநிற்கும் என்பதும் சூரமை நுடக்கத்து * * * * * * * * * * ஆடினை (ஐங், 71) ‘சூர்நசைந்தனையாய் நடுங்கல் கண்டே (குறுந் 52) எனவரும் சங்க இலக்கியத் தொடராலும் நன்குபுலனாம்.

நிலத்தில் வாழும் மானுட மகளிரின் வேறாக வானிலும் வரையிலும் நீர்ப்பரப்பிலும் வாழும் தெய்வத் தன்மை வாய்ந்த மகளிர் உள்ளார்கள் என்பது பண்டைத் தமிழ் மக்களின் நம்பிக்கையாகும். 'சூர் அரமகளிர்’ (திருமுருகு. 41), வான் அரமகளிர் (திருமுருகு. 117), வரையரமகளிர் குறிஞ்சி. 195, மலைபடு. 190, ஐங். 191, 204, அகம். 342) எனச் சங்கச் செய்யுட்களிற் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம். வானுலகில் வாழும் தேவ மகளிர் வானவமகளிர் (மதுரைக். 382) எனப்பட்டனர். சூர் என்னும் தெய்வம் விரும்பிய காந்தள் மலரில் வண்டு மொய்த்தல் இல்லை. அறியாது அதன் மேல் மொய்த்த வண்டினம் தம் பறத்தல் வன்மை கெட்டுவருந்தும் என்பது,

"மலர்ந்த காந்தள் மாறாது திய

கடும் பறைத்தும்பி சூர் நசைத்தாஅய்ப் பறைபண்ணழியும்’ (பதிற். 87)

எனவரும் தொடராற்புலனாம். "மலர்ந்த காந்தளினது மலரை இது தெய்வத்திற்கு உரியது என்று அறிந்தும் அதனை விட்டு நீங்காது ஊதிய விரைந்து பறத் தலையுடைய தும்பியென்னும் சாதிவண்டு தன் பறத்தல் வன்மை சீர் கெட்டழியும். 'சூர்நசைத்தாஅய்' என்றதனைச் சூர்நசைத் தாகவெனத்திரித்து, சூரானது நச்சுதலையுடைத்து ஆகலானேயென வுரைக்க” என்பர் பதிற்றுப்பத்தின் பழைய உரையாசிரியர். சூர்-தெய்வம் என்ற பொருளில் இங்கு ஆளப்பெற்றது. காந்தள் மலரை விரும்பும் தெய்வம் என்றது மைவரையுலகிற்குரிய சேயோனாகிய முருகப் பெருமானை.

“சுரும்புமூசாச் சுடர்ப்பூங்காந்தட்

பெருந்தண் கண்ணிமிலைந்த சென்னியன்”(திருமுருகு 44-45).