பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

123


எனவும் வரும் தொல்காப்பியத் தொடர்களாலும், ‘நாளன்று போகிப் புள்ளிடை தட்ப (புறம். 124), புள்ளும் பொழுதும் பழித்தலல்லதை, உள்ளிச் சென்றோர்ட் பழியலர்’ (டிெ.24) "புட்பகைக்கு ஏவானாகலிற் சாவோம் யாம் (டிெ.68) என வரும் புறநானூற்றுத் தொடர்களாலும் நன்கு புலனாம்.

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியதாக அமைந்த 195 ஆம் அகப்பாடலில்,

“அறுவைதோயும் ஒரு பெருங்குடுமிச்

சிறுபை நாற்றி பல்தலைக் கொடுங்கோல் ஆகுவதறியும் முதுவாய்வேல கூறுகமாதோ நின்கழங்கின்திட்டம் . . . . . எம்மனைமுந்துறத்தருமோ தன்மனையுய்க்குமோ யாதவன் குறிப்பே'

எனவரும் பகுதியில் வேலன் கழங்குபார்த்து நிகழ்வனகூறும் வழக்கம் விளக்கப்பெற்றுள்ளமை காணலாம்.

மனைக்கண் நெடுஞ்சுவரிடத்தே பொருந்தி வாழும் பல்லியின் சொற்களைப் பலமுறை கேட்டு அதன்பின்னர் நிகழ்ந்த இன்பதுன்ப நிகழ்ச்சிகளுடன் இயைத்து எண்ணிய பண்டைக்கால மக்கள், பல்லிசொல்லும் சொற்களைப் பின்னர் நிகழ்வனவற்றை முன்னர்ட் புலப்படுத்தும் நிமித்தமாகக் கொண்டனர் என்பது சங்கச் செய்யுட்களால் நன்கு புலனாகின்றது. பல்லி இன்ன திசையிற் சொன்னால் நற்சொல் எனவும் இன்னதிசையிற் சொன்னால் தீச்சொல் எனவும் பல்லியின் சொல்லுக்குத் திசைவகையாற் பயன் கற்பித்துக் கொண்டார்கள் என்பது பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி (அகம், 9) எனவும், 'பல்லியும் பாங்கொத்திசைத்தன” (கலித். 11) எனவும் வரும் தொடர்களாற் புலனாம்.

பின்வரக்கடவ இன்பதுன்ப நிகழ்ச்சிகளைப் பல்லி தன் சொற்களாற் புலப்படுத்தும் தன்மையதென்பதும், மக்கள் வாழும் மனையகத்துமட்டுமன்றி அவர்கள் செல்லும் காட்டகத்து வழிகளிலும் சோதிடரைப் போன்று