பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


நேரவிருக்கும் இடையூறுகளைத் தம் சொற்களாற் புலப்படுத்தும் திறன் பல்லியின் சொற்களுக்கு உண்டென்பதும் பண்டைக்கால மக்களது வாழ்வியலிற் காணப்படும் நம்பிக்கையாகும். இந்நுட்பம்,

"கள்ளிமுள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க்கு

உறுவது கூறுஞ் சிறுசெந்நாவின் மணியோர்த்தன்ன தெண்குரல் கணிவாய்ப்பல்லிய காடு” (அகம். 151)

எனவரும் அகநானூற்றுத் தொடரால் நன்கு புலனாதல் கானலாம்.

ஆறலை கள்வர் வாழும் கொடிய பாலைநில வழியே செல்வோர் யானைப்படையுடைய பெருவேந்தராயினும் போரின்கண்ணே உயிர்துறந்து புகழ்நிறுவிய வீரர்களை வழிபடுதற்கென அங்கு வரிசையாக நடப்பெற்றுள்ள நடுகற்களைப் பொருந்தியிருந்து இரை பெறாது வருந்தும் முதிய பல்லி, பின்வரும் துன்ப நிகழ்ச்சியினைப் புலப்படுத்தும் இன்னாச்சொற்களை இடையிட்டுரைப்பதாயின், அச்சொற் களைக் கேட்ட அளவிலேயே அவ்வழியில் மேலும் செல்லுதலை நிறுத்தித் தாம் வழியே விரைந்து திரும்புவர் என்பதனை,

Ç

நல்லிசை நிறுத்த நாணுடை மறவர்

நிரைநிலை நடுகற் பொருந்தி இமையாது இரைநசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி சிறிய தெற்றுவதாயிற் பெரிய ஓடையானை உயர்ந்தோராயினும்

நின்றாங்குப் பெயரும் கானம்” (அகம். 387)

எனவரும் அகப்பாடலில் மருதன் இளநாகனார் புனைந்து கூறிய திறம் பல்லி சொல்லில் அக்காலமக்கள் கொண்டிருந்த நம்பிக்கையினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

வருவதுணர்த்தும் பல்லியின் சொல்லைப் பகுத்துணர்வுடைய உயர்தினை மாந்தர் நிமித்தமாகக் கொண்டது போலவே, அஃறிணையுயிர்களாகிய பன்றி