பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தலைமகன் பிரிவினால் வருந்தும் தலைமகள் பகுவாய்ப் பல்லி சொல்லுந்தோறும் நல்ல சொற்களே கூறுக என நடுங்கிப் பரவினாள் என்பது,

“மையல்கொண்ட மதனழியிருக்கையள்

பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி நல்ல கூறெனநடுங்கி” (அகம். 289)

எனவும்,

"வருந்து தோட்பூசல்களையு மருந்தென

உள்ளுதொறு படுஉம் பல்லி புள்ளுத்தொழு துறைவி” (அகம். 351)

என வரும் தொடர்களால் புலனாம்.

வினைமுற்றி மீள்கின்ற தலைவன் தன்னைப் பிரிந்துறையும் தலைமகளது வருத்தத்தை எண்ணித் தன்னெஞ்சினை நோக்கி, நாம் கருதிய வினையினை முடித்துத் திரும்புகின்றோம். ஆதலால் நமது வருகையினை எதிர்பார்த்திருக்கும் தலைமகளது துன்பந்திர மாலைப் பொழுதில் நம்மனையகத்தே நீண்ட சுவரிடத்தே பொருந்தி வாழும் பல்லி நற்சொற் சொல்லுமா? என வினைவுவதாக அமைந்தது,

“முன்னியது முடித்தனமாயின் நன்னுதல்

வருவம் என்னும் பருவரல் தீரப் படுங்கொல் வாழி நெடுஞ்சுவர்ப்பல்லி

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSCS SCS SCS CSS 0S SCCC S S S S S S S S S S S S S S மாலைச்

சிறுகுடிப்பாக்கத் தெம்பெரு நகரானே’ (நற். 169)

எனவரும் நற்றினைப் பாடலாகும்.

தலைவன் பொருளிட்டி வருதற்குப் பிரிந்தானாக, பிரிவாற்றாது வருந்தும் தலைமகளை நோக்கி ஆறுதல் கூறும் தோழி, மிகவுயர்ந்த புகழ்வாய்ந்த நல்ல மனையின் கண்ணே சுவரிடத்தே பொருந்தியிருக்கும் விரும்பத்தக்க குரலை யுடைய பல்லி அவரை நினைக்குந்தொறும் நள்ளிரவிலும்