பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


"மறுவில் துவிச் சிறுகருங்காக்கை

அன்புடை மரபின் நின்கிளையொடு ஆரப் பச்சூன் பெய்த பைந்நின வல்சி பொலம்புனை கலத்தின் தருகுவென் மாதோ வெஞ்சின விறல்வேற் காளையொடு அஞ்சிலோதியை வரக் கரைந்தீமே” Kg៤. 391}

எனவரும் பாடலாகும். "குற்றமற்ற சிறகினையுடைய சிறிய கரிய காக்கையே வெவ்விய சினத்துடன் பொருது வெல்லும் ஆற்றல்மிக்க வேற்படையினையுடைய வீரனோடு உடன் சென்ற என்மகள் இங்கு மீண்டு வருமாறு அழைப்பாயாக! அவ்வாறு அழைத்தால் பசிய ஊன்பெய்த நினத்தொடு கலந்த சோற்றினை நின் அன்புடைய சுற்றத்துடன் நீ நிறைய உண்டு மகிழும்படி பொன்னாற் செய்த உண்கலத்திற் பலியாகத் தருவேன்” எனச் செவிலி காக்கையை நோக்கிக் கூறுவதாக அமைந்தது, மேற்காட்டிய ஐங்குறுநூற்றுப் பாடலாகும்.

தலைமகனது பிரிவினால் வருந்திய தலைவியை ஆற்றுவிக்கும் தோழி நம் வீட்டிற் காக்கை கரைதலால் தலைவர் வந்துவிடுவார் எனக் கூறித் தலைவியைத். தேற்றினாள். அந்நிலையிற் பிரிந்த தலைவனும் விரைந்து வந்தான். தனது பிரிவினால் வருந்திய தலைமகளை ஆறுதல் கூறித் தேற்றிய தோழியை நோக்கி “நீ தலைமகளை நன்கு ஆற்றுவித்தாய்’ எனக் கூறிப் பாராட்டினான். அதுகேட்ட தோழி, நின்னை இங்கு வரும்படி அழைத்த காக்கையின் உதவியே பெரிதும் பாராட்டுதற்குரியது என மறுமொழி கூறுவதாக அமைந்தது,

'திண்தேர் நள்ளிகானத்து அண்டர் பல்லா பயந்த நெய்யிற் றொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு எழுகலத்தேந்தினும் சிறிது, என் தோழி பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே (குறுந் 210)

எனவரும் பாடலாகும். "என்னுடைய ஆருயிர்த்தோழியாகிய