பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கொடிய கண்ணினையும் கூரிய வாயினையும் உடைய பெண்காக்கைகள் பறக்கும் ஆற்றல் பெறாது நடுங்குகின்ற சிறகினையுடைய தம் குஞ்சுகளைத் தழுவிக்கொண்டு தன் இனத்தையழைத்துக் கருங்கண்ணாகிய ஊன்கலந்த பொரிக் கறியுடன் கூடிய செந்நெல்லரிசியாற் சமைக்கப்பெற்ற வெண்ணிறச் சோற்றினைத் தெய்வத்திற்கு இடப் பெறும் பலியுணவுடன் விரும்பியுண்ணுதற் பொருட்டுக் கொழுவி உணவுவளமுடைய நல்ல மனையினருகே கூடியிருக்கும் சிறப்புடையது முதுகுடியிற் பிறந்த அருமன் என்பானுக்குரிய பெருபுகழ் வாய்ந்த சிறுகுடி என்னும் ஊர் என்பது,

“கொடுங்கட் காக்கைக் கூர்வாய்ப்பேடை

நடுங்குசிறைப்பிள்ளை தழீஇக்கிளை பயிர்ந்து கருங்கட் கருனைச் செந்நெல் வெண்சோறு சூருடைப் பலியொடு கவரிய குறுங்காற் கூழுடை நன்மனைக் குழுவின இருக்கும் மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி (நற். 367)

எனவரும் நக்கீரனார் பாடலில் விரித்துரைக்கப் பெற்றது.

குற்றமற்ற கடவுளுறையும் மரத்தில் தங்கிப் பலியுண்டு வாழுமியல்புடைய காக்கை பெருங்காற்றால் மோதப்படும் நீண்ட சினையிடத்தே மழைத்துளி பட ஒடுங்கியுறங்கி வெல்லும் போர் வலிமிக்க சோழர்க்குரிய கழார் என்னும் ஊரிடத்தே தெய்வம் கொள்ளுதற்குரிய நல்ல கூ றுபாடுடைய மிக்க பலிக் கொடையோடு சொரியப்படும் அளவில்லாத உணவாகிய அழகிய பல பலபுதுமையுடைய ஊனொடு விரவிய பெருஞ்சோற்றைப் பகற்பொழுதில் உண்ணலாம் என்னும் நினைவுடன் இருந்தன என்பது,

"மாசில் மரத்த பலியுண்காக்கை

வளிபொரு நெஞ்சினை தளியொடு துங்கி வெல்போர்ச் சோழர் கழார்க் கொள்ளும் நல்வகைமிகு பலிக்கொடையொடு உருக்கும் அடங்காச் சொன்றி யம்பல்யாணர் விடக்குடைப்பெருஞ்சினையுள்ளுவன விருப்ப மழைமைந்துற்ற மாலிருள் நடுநாள்” (நற். 281)

எனவரும் பாடலிற் குறிக்கப்பெற்றது.