பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

133


கடவுள் முதுமரத்துடனுறை பழகிய தேயா வளைவாய்த் தெண்கட் கூருகிர் வாய்ப்பறை யசாஅம் வலிமுந்து கூகை மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல் எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும் எஞ்சாக் கொள்கையெங் காதலர் வரல் நசைஇத் துஞ்சாதலமரு பொழுதின் அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றாதீமே” (நற். 83)

எனவரும் நற்றினைப் பாடலாகும். இதனைக் கூர்ந்து நோக்குங்கால் ஊனொடு நெய்லி.ரவிச் சமைத்த சோற்றினை எலிக்கறியுடன் கடவுள் மரத்தில் உடனுறையும் கூகை முதலியவற்றிற்குப் பலியாக இட்டுப் படைக்கும் வழக்கம் பண்டைக்காலத்திருந்தமையும் கூகையின் குரல் நன்னிமித்த

மாகக் கொள்ளப்பட மையும் கல் :ைாகும்.

வேந்தனெ க், ரு வேந்தனொடு இகல்

கருதிப் போர் செய்ய ல் : காலத்தில் பகைவனது நாட்டில் வாழும் அந்தனர், பெண்டிர், பிணியுடையோர் முதலிய வலியற்றோரை அந்நாட்டினின்றும் அப்புறப் படுத்தல் வேண்டியும் போரால் நேரும் துன்பங்களிலிருந்து தப்பிப் புறத்தே செல்லும் உணர்வில்லாத பசு நிரைகளைத் தன் நாட்டில் கொணர்ந்து காத்தல் வேண்டியும் தன் படைத் தவைர்களைப் பகைவர் நாடுபுக்கு அந்நாட்டிலுள்ள பசுக் கூட்டங்களை இரவிற் களவிற் கவர்ந்து வருமாறு செய்தல் அறத்தின் வழிப்பட்ட போர்த் தொடக்கமாகக் கருதப் பட்டது. அந்நிலையில் அரசனால் ஏவப்பட்ட படை வீரர்கள் நகரத்தினின்றும் போய் ஒரு சிற்றுாரில் தங்கித் தம் வேந்தனுக்கு எதிர்காலத்தில் உளவாகும் ஆக்கத்தை அறிந்துவருதற்பொருட்டு ஊர்ப்புறத்தே இயல்பாகப்