பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பேசப்படும் நற் சொல்லினைக் கேட்டறிவர். இது விரிச்சியோர்த்தல் எனப்படும். இச்செய்தி படையியங்கரவம் பாக்கத்து விரிச்சி (தொல். புறத். 3) எனவரும் தெல்காப்பியச் சூத்திரத்தில் கூறப்பட்டது. விரிச்சி யோர்த்தல் என்பது பெருமுது பெண்டிராகிய மங்கலமகளிர் நெல்லும் மலரும் து வித் தெய்வத்தை வழிபட்டு நின்றாராக அந்நிலையில் அவ்வூர்ப் புறத்தே வாழும் மக்கள் தம்மியல்பில் உரையாடும் போது தோன்றிய நற்சொற்களைத் தங்களுடைய வினை முடித்தற்குரிய நன்னிமித்தமாகக் கேட்டறிதலாகும். மங்கல மடந்தையராகிய பெருமுது பெண்டிர் மாலைக் காலத்தே நறுமணம் வாய்ந்த முல்லையின் அரும்பவிழ்ந்த பூக்களை நாழி எனப்படும் முகத்தலளவையாகிய படியிற் கொண்ட நெல்லுடனே தூவித் தாம் வழிபடும் தெய்வத்தை வணங்கி நற்சொல்லை எதிர்பார்த்து நின்றனராக, அந்நிலையில் அங்கு வாழும் ஆயர்குலப் பெண்ணொருத்தி, சிறிய தாம்பிற் கட்டப்பட்ட இளங்கன்று, மேயச் சென்ற தன் தாய்ப் பக வாராமையால் பாலுண்ணாது பசியாற் சுழல்கின்ற வருத்தத்தைக் கண்டு அக்கன்றினை நோக்கி நும்முடைய தாயர் நிரம்பப் புல்லை மேய்ந்து கோல் தாங்கிய கோவலர் பின்னின்று செலுத்த இப்பொழுதே வந்து சேர்வர் எனக் கூறினாள். அச்சொல்லை நற்சொல்லாகக் கேட்டோம். அதனால் நின்னைப் பிரிந்து வினைமேற் சென்ற தலைவர் பகைவரை வென்று வினைமுடித்து விரைவில் வந்து சேர்வார். ஆகவே நின் மனத்தடுமாற்றமாகிய வருத்தத்தைப் போக்குவாயாக’ எனத் தலைவனது பிரிவால் இல்லின்கண் இருந்து வருந்தும் தலைமகளை ஆயத்தார் ஆற்றுவித்தனர். இச் செய்தி,

"...................... நெல்லொடு

நாழி கொண்ட நறுவி முல்லை அரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது பெருமுதுபெண்டிர் விரிச்சிநிற்பச் சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள் நடுங்குசுவலசைத்தகையள் கைய

கொடுங்கோற்கோவலர் பின்னின் றுய்த்தர