பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

135


இன்னே வருகுவர் தாயர் என்போள் நன்னர் நன்மொழி கேட்டணம் அதனால் நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர் முனைகவர்ந்து வருதல் வாய்வது நீநின் பருவரல் எவ்வம் களை மாயோய்” (முல்லைப். 6-21)

என வரும் முல்லைப் பாட்டடிகளில் விரித்துரைக்கப் பெற்றது. இவ்வாறு விரிச்சி யோர்த்தலாகிய நம்பிக்கை கடைச் சங்க காலத்தில் நிலைபெற்றிருந்தது என்பது,

'திருந்திழை மகளிர் விரிச்சிநிற்ப (நற்.40)

எனவரும் நற்றிணைத் தொடராலும் நன்கு புலனாகும்.

வானத்தில் உள்ள நாள்மீன் கோள் மீன் ஆகியவற்றின் மாறுதல்களால் நாடாள் வேந்தர்க்கும் குடிமக்களுக்கும் நேரவிருக்கும் இன்ப துன்பங்களை முன்னரே கூர்ந்துணர்ந்து இவை நல்லநாள் இவை தீய நாள் எனக் கண்டு முக்கால நிகழ்ச்சிகளையும் முன்னறிந்தறிவிக்கும் சோதிட நூலிலும் ஆந்தை முதலிய புட்களின் குரல், இயக்கம் என்பவற்றிலும் பலகறை முதலியவற்றைக் கொண்டு வருவது உணர்த்தும் பிற நிமித்தங்களிலும் இங்ங்ணம் நனவில் நிகழும் நிகழ்ச்சிகளே யன்றிக் கனவில் நிகழும் நிகழ்ச்சிகளிலும் பண்டைக் காலத் தமிழ் மக்கள் அழுந்திய நம்பிக்கை கொண்டிருந்தனர். அத்தகைய நம்பிக்கைகளின் விளைவாக நாட்டுக்கு நேர விருக்கும் இடையூறுகளை முன்னுணர்ந்த புலமைச் சான்றோர் தம் பாட்டின் திறத்தாலே விலக்க முயன்றனர்.

கூடலூர் கிழார் என்னும் புலவர், யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னன் காலத்தில் வாழ்ந்தவர். இவர் காலத்தில் பங்குனித் திங்களின் முதற் பதினைந்தில் கார்த்திகை நாளில் உத்தரம் என்னும் விண்மீன் உச்சியிலிருந்து சாய மூல மீன் எழ மிருகசீரிடம் மறைய விண்ணில் விண்மீன் ஒன்று வடக்கும் கிடக்கும் போகாமல் இடை நடுவே எரிந்து வீழ்ந்தது. அங்ங்னம் வானத்தில் ஒரு மீன் எரிந்து வீழ்தலைக் கண்ட கூடலூர் கிழார் தம் அரசனாகிய யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல்